அதிபர் பதவிக்கு பிடன் உரிமை கோரினால்.. நானும் உரிமை கோருவேன்.. டிரம்ப் பரபரப்பு டிவிட்.. மோதல்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அதிபர் பதவிக்கு பிடன் உரிமை கோரினால், தானும் உரிமை கோருவேன் என்று அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிபெறுவதற்கு இன்னும் 6 எலக்ட்ரல் வாக்குகளே தேவை என்ற நிலையில்.. ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

எத்தனை

எத்தனை

அதிலும் பிடன் தற்போது ஜார்ஜியா, பென்சில்வேனியா ஆகிய தொகுதிகளிலும் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளார். இதனால் பிடன் வெற்றியை தவறானது, முறைகேடானது என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். தபால் வாக்குகளில் முறைகேடு செய்து பிடன் வென்றுவிட்டார், என்று டிரம்ப் குற்றஞ்சாட்டு வருகிறார்.

டிவிட்

இது தொடர்பாக டிரம்ப் செய்துள்ள டிவிட்டில், பிடன் அவசரப்பட்டு வெற்றிக்கு உரிமைகோர கூடாது. அவசரப்பட்டு அதிபர் பதவிக்கு பிடன் தவறாக உரிமை கோர கூடாது. அதிபர் பதவிக்கு அவர் உரிமை கோரினால் என்னாலும் உரிமை கோர முடியும்.

அவசரம் வேண்டாம்

பிடன் அமைதி காக்க வேண்டும். சட்ட போராட்டம் இப்போதுதான் தொடங்கி உள்ளது. பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் நான்தான் முன்னிலை வகித்து வந்தேன். தேர்தல் முடிந்த இரவில் நான்தான் பல மாகாணங்களில் முன்னிலை வகித்து வந்தேன்.

வாக்குகள் காணாமல் போகிறது

வாக்குகள் காணாமல் போகிறது

ஆனால் நாளாக நாளாக எனக்கான வாக்குகள் காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது. என்னுடைய லீடிங் எப்படி மாயமாக மறைந்தது? முறையான சட்ட போராட்டம் மூலம் இந்த மாகாணங்களில் நான் மீண்டும் வெற்றிபெறுவேன், மீண்டும் முன்னிலை வகிப்பேன், என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+