பென்சில்வேனியாவில் வென்றாலும் தோல்விதான்.. மகுடத்தை இழக்கும் டிரம்ப்.. உறுதியாகிறது பிடன் வெற்றி!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் தோல்வி அடைந்தாலும் கூட ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று இரவுக்குள் முழுமையான முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக அளவில் தபால் வாக்குகள் இந்த முறை பதிவாகி உள்ளது. இதனால் வாக்குகளை எண்ணும் பணி தாமதம் ஆகி உள்ளது. அதிலும் பென்சில்வேனியா, ஜார்ஜியா மாகாணங்களில் பல லட்சம் வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தபால் வாக்குகள்
தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் பிடன் வெற்றி உறுதியாகிவிட்டது. பென்சில்வேனியாவில் தோல்வி அடைந்தாலும் கூட ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

எப்படி
தற்போது ஜார்ஜியா, பென்சில்வேனியா, அலாஸ்கா, நெவாடா, நார்த் கரோலினா மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மற்ற மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள இந்த மாகாணங்களில் நெவாடா அல்லது ஜார்ஜியா இரண்டில் ஒன்றில் வென்றால் கூட பிடன் அதிபர் ஆகிவிட முடியும்.

கணக்கு
தற்போது பிடன் வெற்றிபெற 6 எலக்ட்ரால் வாக்குகள் தேவை. டிரம்ப் வெற்றிபெற 56 வாக்குகள் தேவை. இதில் பென்சில்வேனியாவில் 20 வாக்குகள், நார்த் கரோலினாவால் 15 வாக்குகள், ஜார்ஜியாவில் 16 வாக்குகள், நெவாடாவில் 6 வாக்குகள், அலாஸ்காவில் 3 வாக்குகள் உள்ளது.

வெற்றி
இந்த நிலையில் நெவாடா அல்லது ஜார்ஜியாவில் வென்றால், பிடன் அதிபர் தேர்தலில் வென்றுவிடுவார். ஏற்கனவே நெவாடாவில் பிடன் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் ஏறத்தாழ பிடன் வெற்றி உறுதியாகி உள்ளது. ஜார்ஜியாவிலும் பிடன் வேகமாக தபால் வாக்குகளை குவித்து வருகிறார் என்பதால் பிடன் வெற்றி உறுதியாகி உள்ளது.

தோல்வி
இன்னொரு பக்கம் டிரம்ப் வெற்றிபெற 56 வாக்குகள் தேவை. இதனால் பென்சில்வேனியாவில் 20 வாக்குகள், நார்த் கரோலினாவால் 15 வாக்குகள், ஜார்ஜியாவில் 16 வாக்குகளை இவர் பெற வேண்டும். மேலும் நெவாடாவில் கண்டிப்பாக 6 வாக்குகளை பெற வேண்டும்.

பென்சில்வேனியா
பென்சில்வேனியாவில் மட்டும் வென்றுவிட்டு டிரம்ப் அதிபர் ஆக முடியாது. அதே சமயம் பென்சில்வேனியா, நெவாடா, ஜார்ஜியா, நார்த் கரோலினா ஆகிய 4 மாகாணத்திலும் டிரம்ப் வெற்றிபெற வாய்ப்பே இல்லை. இதனால் டிரம்ப் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications