பிடன் vs டிரம்ப்.. 1.5 மில்லியன் வாக்குகள்.. கிங் மேக்கராக உருவெடுக்கும் பென்சில்வேனியா.. திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் - பிடன் இடையே 5 மாகாணங்களில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் பென்சில்வேனியா மாகாணம்தான் தற்போது கிங் மேக்கராக மாறியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தற்போது வெற்றியின் விளிம்பில் இருக்கிறார்.

264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

போட்டி

போட்டி

டிரம்ப் - பிடன் இடையே 5 மாகாணங்களில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பென்சில்வேனியா, நார்த் கரோலினா, ஜார்ஜியா, நேவாடா, அலாஸ்காவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் ஏதாவது ஒரு பெரிய மாகாணத்தில் பிடன் வெற்றிபெற்றால் அவர் அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும்.

5 மாகாணம்

5 மாகாணம்

தற்போது பென்சில்வேனியா, நார்த் கரோலினா, ஜார்ஜியாவில் டிரம்ப் நூலிழையில் முன்னிலை வகித்து வருகிறார். நேவாடாவில் பிடன் நூலிழையில் முன்னிலை வகித்து வருகிறார். அலாஸ்காவில் பாதி வாக்குகளே எண்ணப்பட்டுள்ள நிலையில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

டிரம்ப் முன்னிலை

டிரம்ப் முன்னிலை

ஐந்து மாகாணத்தில் 4ல் டிரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார். ஆனால் இங்குதான் பெரிய டிவிஸ்ட் இருக்கிறது. இந்த 5 மாகாணங்களிலும் இன்னும் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடியவில்லை. இங்கெல்லாம் இன்னும் நிறைய தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். இன்னும் பல லட்சம் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும்.

குடியரசு கட்சி

குடியரசு கட்சி

இதில் நார்த் கரோலினா டிரம்பின் குடியரசு கட்சிக்கு சாதகமான மாகாணம். அங்கு 15 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளது. குடியரசு கட்சிக்கு சாதகமான மாகாணம் என்பதால் இங்கு மீதம் இருக்கும் தபால் ஓட்டுகளில் டிரம்ப் வெற்றிபெற கூட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் 16 எலக்ட்ரல் வாக்குகளை கொண்ட ஜார்ஜியாவில்.. தபால் வாக்குகள் இரண்டு தரப்புக்கும் செல்ல வாய்ப்புள்ளது.

கிங் மேக்கர்

கிங் மேக்கர்

இதில் பென்சில்வேனியா மாகாணம்தான் தற்போது கிங் மேக்கராக மாறியுள்ளது. இரண்டு பேருக்கும் கடுமையான போட்டி நிலவும் நிலையில் பென்சில்வேனியா முக்கியத்துவம் பெறுகிறது. பென்சில்வேனியாவில் 20 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளது. பிடன் - டிரம்ப் இருவருக்கும் இடையில் பென்சில்வேனியாவை கைப்பற்ற போட்டி நிலவி வருகிறது.

வெற்றி

வெற்றி

இங்கு வென்றால் பிடன் அதிபர் தேர்தலை வென்றுவிடுவார். அதேபோல் இங்கு டிரம்ப் வென்றாலும், மற்ற மாகாணங்கள் குடியரசு கட்சி ஆதரவு மாகாணம் என்பதால், அதிபர் தேர்தலை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். இதனால் பென்சில்வேனியாவில் 20 எலக்ட்ரல் வாக்குகள்தான் தற்போது கிங் மேக்கராக மாறியுள்ளது. இங்கு டிரம்ப் கிட்டத்தட்ட 1.3 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் டிரம்பை இங்கு பிடன் முந்துவதற்கு வாய்ப்புள்ளது. பிடன் வேகமாக இங்கு முன்னேறி வருகிறார். பென்சில்வேனியாவில் இன்னும் 1.5 மில்லியன் மக்கள் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். இவை எல்லாம் தபால் வாக்குகள். பென்சில்வேனியாவில் அதிகமாக பிடன் ஆதரவாளர்களே தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஜனநாயக கட்சியினர்தான் அங்கு தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

கடந்த தேர்தல்

கடந்த தேர்தல்

கடந்த ஒரு தேர்தலை தவிர மற்ற அனைத்து தேர்தலிலும் பென்சில்வேனியா ஜனநாயக கட்சியின் கோட்டையாக இருந்துள்ளது. இந்த நிலையில் அதிக தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்பதால் பென்சில்வேனியாவில் முடிவுகள் மாறலாம். டிரம்ப்பை முந்தி திடீரென அங்கு பிடன் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதே சமயம் அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்ய இன்னும் 30 மணி நேரம் கூட ஆகும்.

ஏன் 30 மணி நேரம்

ஏன் 30 மணி நேரம்

பென்சில்வேனியா விதிப்படி வாக்கு பதிவு நாளுக்கு முன் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட தபால் வாக்குகள்.. வாக்கு பதிவு நாள் அன்று கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் புதிதாக நிறைய தபால் வாக்குகள் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்பதால் பென்சில்வேனியாவில் முடிவுகளை அறிவிக்க தாமதம் ஆகிறது... இந்த வாக்குகள்தான் அதிபரை முடிவு செய்ய போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+