அமெரிக்காவின் புது அமைச்சரவையில்.. எலான் மஸ்க்கிற்கு இடம்! டிக் அடித்த டிரம்ப்? மிகப்பெரிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் தேர்தல் நடக்கும் அதே நாளில்.. குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.. டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் ஆகியோர் ஒன்றாக நேரம் செலவிட்டு வருகின்றனர். அவர்கள் தேர்தல் முடிவுகளை ஒன்றாகவே கண்காணித்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப். எலான் மஸ்க் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம். அவரை போன்றவர்களை காக்க வேண்டியது முக்கியமான விஷயம். அவரை பாதுகாக்க வேண்டும். என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார். குடியரசு கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வாட்ச் பார்ட்டி நிகழ்வில்.. டிரம்ப் உடன் பல பெரும் தலைகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

us presidential election 2024 kamala harris donald trump 2024

அந்த வகையில் எலான் மஸ்க் அங்கே உள்ளார். எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்துள்ளார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது. அவர் உட்பட பலர் அரசியல் ரீதியாக வலதுசாரி பக்கம் திரும்பி உள்ளனர்.

முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார்.

அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் இவருக்கு அமைச்சரவை பதவி தரலாம். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்படலாம்.. அல்லது நிதி நிர்வாகத்தில் செலவுகளை குறைக்கும் அமைச்சரவை உருவாக்கப்படலாம்.

இதற்கு எலான் மஸ்க் அமைச்சராக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 277 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அந்த வகையில் டிரம்ப் வென்று மீண்டும் அதிபராகிறார்.

உரை: தேர்தல் வெற்றிக்கு பின் டொனால்ட் டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரையில், நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.

நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றியை அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம், என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+