20 வருடங்களில் நடக்காத பெரிய சம்பவம்! டிரம்ப் செய்த சாதனை! ஸ்டன் ஆகி பிரஸ் மீட்டையே ரத்து செய்த கமலா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த 20 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனையை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் படைத்துள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் கமலா ஹாரிஸ் 6,27,32,083 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் டிரம்ப் 6,77,41,682 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு சதவிகித அடிப்படையில் 47 9 சதவிகித வாக்குகளை கமலா ஹாரிஸ் வென்றார். இன்னொரு பக்கம் டிரம்ப் 51 சதவிகித வாக்குகளை வென்றுள்ளார். மக்கள் வாக்கு அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறை ஜனநாயக கட்சியை முந்தி உள்ளது. அதாவது எலக்ட்ரல் வாக்கு தாண்டி மக்களின் மொத்த வாக்கிலும் டிரம்ப் இந்த முறை சாதனை செய்துள்ளார்.

us presidential election 2024 kamala harris donald trump 2024

50 மாகாணங்களில் 25 மாகாணங்களில் டிரம்ப் ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டார். 5 மாகாணங்களில் வெற்றியின் விளிம்பில் உள்ளார். மொத்தமாக 30 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெறுவார்.

மீதம் 20 மாகாணங்களில் மட்டுமே கமலா ஹாரிஸ் வெற்றிபெறுகிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கலிபோர்னியா தவிர கமலா ஹாரிஸ் பெரிய மாகாணங்களில் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை.

அதோடு இல்லாமல்.. டிரம்ப் ஃப்ளோரிடா தொடங்கி பெரிய மாகாணங்களில் அதிகம் வென்றுள்ளார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 247 எலக்ட்ரல் வாக்குகளை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகளை வென்றுள்ளார்.

முக்கியமாக ஸ்விங் மாகாணங்கள்: ஸ்விங் மாநிலங்கள் என்பவை குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான கடுமையான போட்டி நிலவும் மாநிலங்கள். இங்கே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். ஆனால் இதில் அனைத்திலும் இந்த முறை டிரம்ப் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் இந்த தேர்தல் வெற்றி டிரம்பிற்கு மிகப்பெரியதாக மாறும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.

அரிசோனாவில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

மிச்சிகன் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

விஸ்கான்சின் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

நெவேடா டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

பென்சில்வேனியா டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

வட கரோலினாவில் டிரம்ப் வென்றுவிட்டார்

ஜார்ஜியாவில் டிரம்ப் வெற்றிபெற்றுவிட்டார்

அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

இந்த முறை எலக்ட்ரல் வாக்குகள், மக்கள் வாக்குகள் இரண்டிலும் டிரம்ப் வென்றுள்ளார். இதனால் கமலா ஹாரிஸ் பிரஸ் மீட்டை ரத்து செய்துள்ளார். அதோடு மக்கள் முன் நிகழ்த்த இருந்த உரையையும் ரத்து செய்துள்ளார் . இது கமலாவின் தோல்வி மட்டுமின்றி வேறு வசீகர தலைவர்கள் இல்லாமல்.. பிடன் முதிர்ச்சி.. கமலா தோல்வியால் ஜனநாயக கட்சி கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+