சம்பவம் செய்த டொனாலட் டிரம்ப்.. அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை நடக்காத ஒன்று.. என்ன சாதனை?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், டொனால்ட் ஜே. டிரம்ப் 76 மில்லியன் வாக்குகளை கடந்து உள்ளது. . அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிக வாக்குகள் இதுவாகும். டிரம்ப்: 76,133,250 ஹாரிஸ்: 73,237,314 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இது போக கடந்த 20 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனையை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் படைத்துள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் படுதோல்வி அடைந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் கமலா ஹாரிஸ் 73,237,314 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் டிரம்ப் 76,133,250 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு சதவிகித அடிப்படையில் 47 9 சதவிகித வாக்குகளை கமலா ஹாரிஸ் வென்றார். இன்னொரு பக்கம் டிரம்ப் 51 சதவிகித வாக்குகளை வென்றுள்ளார். மக்கள் வாக்கு அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறை ஜனநாயக கட்சியை முந்தி உள்ளது. அதாவது எலக்ட்ரல் வாக்கு தாண்டி மக்களின் மொத்த வாக்கிலும் டிரம்ப் இந்த முறை சாதனை செய்துள்ளார்.
50 மாகாணங்களில் 30 மாகாணங்களில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார் மீதம் 20 மாகாணங்களில் மட்டுமே கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கலிபோர்னியா தவிர கமலா ஹாரிஸ் பெரிய மாகாணங்களில் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை.
அதோடு இல்லாமல்.. டிரம்ப் ஃப்ளோரிடா தொடங்கி பெரிய மாகாணங்களில் அதிகம் வென்றுள்ளார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 312 எலக்ட்ரல் வாக்குகளை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை வென்றுள்ளார்.
முக்கியமாக ஸ்விங் மாகாணங்கள்: ஸ்விங் மாநிலங்கள் என்பவை குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான கடுமையான போட்டி நிலவும் மாநிலங்கள். இங்கே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். ஆனால் இதில் அனைத்திலும் இந்த முறை டிரம்ப் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் இந்த தேர்தல் வெற்றி டிரம்பிற்கு மிகப்பெரியதாக மாறும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.
அரிசோனாவில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார்
மிச்சிகன் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார்
விஸ்கான்சின் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார்
நெவேடா டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார்
பென்சில்வேனியா டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார்
வட கரோலினாவில் டிரம்ப் வென்றுவிட்டார்
ஜார்ஜியாவில் டிரம்ப் வெற்றிபெற்றுவிட்டார்
அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
இந்த முறை எலக்ட்ரல் வாக்குகள், மக்கள் வாக்குகள் இரண்டிலும் டிரம்ப் வென்றுள்ளார். இதனால் கமலா ஹாரிஸ் பிரஸ் மீட்டை ரத்து செய்தார். அதோடு மக்கள் முன் நிகழ்த்த இருந்த உரையையும் ரத்து செய்தார். இது கமலாவின் தோல்வி மட்டுமின்றி வேறு வசீகர தலைவர்கள் இல்லாமல்.. பிடன் முதிர்ச்சி.. கமலா தோல்வியால் ஜனநாயக கட்சி கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications