இன்ஸ்ட்டா.. எக்ஸ்.. பாட்காஸ்ட்டை.. வைத்தே டொனால்ட் டிரம்ப் செய்த மூவ்.. கமலா சறுக்கிய அந்த இடம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பிற்கு அதிக அளவில் இளைஞர்கள் வாக்கு அளிக்கப்பட்டு உள்ளது. AP VoteCast தரவு மூலம் டிரம்ப் அதிக அளவில் வாக்குகளை பெற்று வருகிறார். முக்கியமாக இளைஞர்கள் வாக்கு அவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
30 வயதிற்குட்பட்ட வாக்காளர்களில் பெரும் பகுதியினர் டிரம்பிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 2020ல் பிடனை ஆதரித்த 10ல் 6 பேருடன் ஒப்பிடும்போது.. 2024ல் இளம் வாக்காளர்களில் 10ல் 4 பேர் டிரம்பிற்குச் ஆதரவாக வாக்களித்து உள்ளனராம். முக்கியமாக இன்ஸ்ட்டா.. எக்ஸ்.. பாட்காஸ்ட் மூலம் டிரம்ப் அதிக அளவில் இளைஞர்கள் பக்கம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை விட.. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக நாடு முழுக்க நடத்தப்பட்ட Edison Research' நிறுவனத்தின் தேசிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எடிசன் ரிசர்ச்சின் கருத்து கணிப்பில் நாடு முழுவதும் உள்ள 44% வாக்காளர்கள் டிரம்ப் அதிபர் ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் உள்ள 48% பேர் கமலா ஹாரிஸ் அதிபர் ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 31% வாக்காளர்கள், ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர். பொருளாதாரம் தான் தாங்கள் வாக்களிக்கும் விதத்தை மாற்றுவதாக தெரிவித்துள்ளனர். 11% பேர் குடியேற்றம், 14% கருக்கலைப்பு, 34% ஜனநாயகத்தின் நிலை, 4% வெளியுறவுக் கொள்கை ஆகியவை மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் 45% வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மோசமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.. நாடு முழுவதும் உள்ள 51% வாக்காளர்கள் பொருளாதாரத்தை கையாள டிரம்பை அதிகம் நம்புவதாகக் கூறியுள்ளனர். 47% பேர் ஹாரிஸை அதிகம் நம்புவதாகக் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான ஆக்கபூர்வமற்ற புலம்பெயர்ந்தோர் அவர்கள் வந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள 39% வாக்காளர்கள் கூறியுள்ளனர். 57% பேர் அவர்கள் அகதிகளாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 51% வாக்காளர்கள் கருக்கலைப்பு பிரச்சினையை கையாள ஹாரிஸ் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். 44% பேர் டிரம்பை அதிகம் நம்புவதாகக் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 31% வாக்காளர்கள் இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு மிகவும் வலுவாக இருப்பதாகக் கூறியுள்ளனர். 30% பேர் போதுமான ஆதரவு இஸ்ரேலுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். . நாடு முழுவதும் உள்ள 73% வாக்காளர்கள் அமெரிக்காவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ளன. அசோசியேட் பிரஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் முடிவுகளை அறிவிக்க தொடங்கி உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளில் அமெரிக்க முன்னாள் அதிபர் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 210 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 113 வாக்குகளை வென்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார்.












Click it and Unblock the Notifications