அமெரிக்க அதிபர் வரலாற்றில்.. மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்லும் டிரம்ப்? உதவிய 10 பிரம்மாஸ்திரங்கள்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்ய உள்ளார் அதிபர் வேட்பாளர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 247 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகளை வென்றுள்ளார். 7 ஸ்விங் மாகாணங்களில் 2ஐ வென்றவர்.. 5ல் முன்னிலை வகிக்கிறார்.
டிரம்ப் இதன் மூலம் கிட்டத்தட்ட 300 மாகாணங்களை வென்று ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு முன் நடந்த அமெரிக்க தேர்தல்களில் ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் 1936 இல் 531 இல் 523 எலக்ட்ரல் வாக்குகளைப் பெற்று, 84.5% தேர்தல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. அதேபோல் 1972 இல் ரிச்சர்ட் நிக்சன் 538 எலக்ட்ரல் வாக்குகளில் 520 எலக்ட்ரல் வாக்குகளைப் பெற்றார்.

1964ல் லிண்டன் பி. ஜான்சன் 538 தேர்தல் வாக்குகளில் 486 எலக்ட்ரல் வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். 1920ல் வாரன் ஜி. ஹார்டிங் 531இல் 404 தேர்தல் எலக்ட்ரல் வாக்குகளைப் பெற்றார்,. 1956ல் டுவைட் டி. ஐசனோவர் 531 வாக்குகளில் 457 எலக்ட்ரல் வாக்குகளைப் பெற்றார். தற்போது கிட்டத்தட்ட அதற்கு நிகரான ஒரு வெற்றியை மிகப்பெரிய வேட்பாளர்களில் ஒருவரான கமலா ஹாரிஸை எதிர்த்து டிரம்ப் பெற உள்ளார்.
டிரம்ப் இந்த மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய முக்கியமான 10 காரணங்கள் உள்ளன:
1. அமெரிக்காவின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. மிக மோசமான கொள்கைகள் காரணமாக அவர்களின் பொருளாதாரம் சரியாய் தொடங்கி உள்ளது .
2. அமெரிக்காவில் மருத்துவ துறை மிக மோசமான பின்னடைவை சந்தித்துவிட்டது. அங்கே ஹெல்த்கேர் கொள்கைகளை மாற்ற வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஜனநாயக கட்சி செவிமடுக்கவில்லை.
3. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் மக்கள் அந்நாட்டு மக்களுக்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக உள்ளனர். இதை தொடக்கத்தில் இருந்து எச்சரித்த ஒரே நபர் டிரம்ப்.
4. அமெரிக்காவில் வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மோசமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.. மிக மோசமான வேலையிழப்பு, அரசின் மெத்தனம்தான் இதற்கு காரணம்.
5. விலைவாசி உயர்வு.. பணவீக்கம் அந்நாட்டு மக்களை கடுமையாக பாதித்து உள்ளது.
6. 30 வயதிற்குட்பட்ட வாக்காளர்களில் பெரும் பகுதியினர் டிரம்பிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 2020ல் பிடனை ஆதரித்த 10ல் 6 பேருடன் ஒப்பிடும்போது.. 2024ல் இளம் வாக்காளர்களில் 10ல் 4 பேர் டிரம்பிற்குச் ஆதரவாக வாக்களித்து உள்ளனராம். முக்கியமாக இன்ஸ்ட்டா.. எக்ஸ்.. பாட்காஸ்ட் மூலம் டிரம்ப் அதிக அளவில் இளைஞர்கள் பக்கம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
7. டிரம்ப் பிரச்சாரம் இந்த முறை அமெரிக்கா உணர்வு என்பதை தாண்டி.. தேசியத்தை மட்டும் பேசாமல் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து இருந்தது.
8. துப்பாக்கி கலாச்சாரத்திற்கு டிரம்ப் தரும் தீர்வை மக்கள் விரும்புகின்றனர்.
9. சர்வதேச போர்களில்.. பிடன் / கமலா கொள்கைகளை மக்கள் விரும்பவில்லை.
10. முக்கியமாக ஸ்விங் மாகாணங்களில் உள்ள உள் மாகாண விவகாரங்களுக்கு டிரம்ப் கொடுக்கும் தீர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications