அடுத்த அமெரிக்க அதிபர் யார்? தேர்தல் கணிப்புகளில் வந்த திருப்பம்.. இது மட்டும் நடந்தா சம்பவம்தான்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் டிரம்ப் - கமலா ஆகியோரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. முன்னதாக டிரம்ப் - பிடன் இடையே போட்டி இருந்த போது டிரம்ப்தான் வெற்றிபெறுவார் என்று கூறப்பட்டது. கணிப்புகள் டிரம்பிற்கு ஆதரவாக இருந்தன. இப்போது கணிப்புகள் மாற தொடங்கி உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியமான கட்டமாக கருதப்படும், அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது. ஏபிசி சேனல் மூலம் இந்த விவாதம் 90 நிமிடம் நடந்தது. முன்னதாக அதிபர் பிடன் - முன்னாள் அதிபர் டிரம்ப் இடையே விவாதம் நடக்க.. அதில் பிடன் மோசமாக சொதப்பினார். அதன்பின் அதிபர் தேர்தலில் இருந்து பிடன் விலக துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

us presidential election 2024 kamala harris donald trump 2024

குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்.. பிடன் போல கமலா ஹாரிஸை எளிதாக "bully" செய்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டுதான் விவாதத்திற்கு வந்தார். ஆனால் விவாதத்தில் நடந்தது அதற்கு எதிர்மாறான சம்பவம். பிடன் போல என்னை எளிதாக சீண்டிவிட முடியாது என்பதை தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ் பல இடங்களில் நிரூபித்துக்காட்டினார். இப்போது கமலா ஹாரிஸ் வருகைக்கு பின் கணிப்புகள் மாற தொடங்கி உள்ளன.

கடந்த பத்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் ஒன்பது தேர்தலை துல்லியமாகக் கணித்த பிரபல வரலாற்றாசிரியரான ஆலன் லிக்ட்மேன், இந்த தேர்தலை கண்டித்துள்ளார். இந்த முறை தேர்தலில் பெரிய சர்ப்ரைஸ் இருக்காது . பலரும் கமலா ஹாரிஸ் வெல்வார் என்று நினைக்கிறார்கள். அதுதான் நடக்க போகிறது. தேர்தலுக்கு முந்தைய இறுதி வாரங்களில் எந்தவொரு எதிர்பாராத நிகழ்வும் முடிவை மாற்ற வாய்ப்பில்லை.

கணிப்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட அதிக புள்ளிகளை பெறுவதால் அவரே வெற்றிபெறுவார், என்று ஆலன் லிக்ட்மேன் கணித்துள்ளார்.

Lichtman இன் தேர்தல் கணிப்புகள் "13 கீ" எனப்படும் தனித்துவமான மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை, இது 13 வகையான கேள்விகளின் மூலம் செய்யப்படும் கணிப்பு ஆகும். தற்போதைய வேட்பாளர்களின் செயல்பாடு, வலிமை ஆகியவற்றை வைத்து வெற்றியாளர்களை மதிப்பிடும் முறையாகும். இந்த முறை மட்டுமன்றி தி எக்கனாமிஸ்ட், டைம்ஸ் ஆகிய ஊடகங்களுக்கும் கமலா ஹாரிஸ்தான் 54% வெல்ல வாய்ப்பு உள்ளது, டிரம்பிற்கு 46% மட்டுமே வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.

முன்னதாக விவாதத்தின் போதே.. பெரும்பாலான ஊடகங்கள் கமலா ஹாரிஸ் சிறப்பாக பேசினார். அவர் பதற்றம் இன்றி இருந்தார். டிரம்ப் ஆக்ரோஷப்பட்டதை ஹாரிஸ் சிறப்பாக எதிர்கொண்டார். நம்பிக்கையாக பேசினார். பொய்யான விமர்சனங்களை கூட தன்மையாக எதிர்கொண்டார் என்று கருத்துக்களை வைத்துள்ளனர். வெளிநாட்டு மக்களின் அமெரிக்க குடியேற்றம் குறித்து பேசும்போது டிரம்ப் கை ஓங்கி இருந்தாலும் கூட டிரம்ப் மற்ற இடங்களில் கமலா ஹாரிஸிடம் அடங்கி போகும் சூழல் ஏற்பட்டது. பிடன் மீது ஆதிக்கம் செலுத்தியது போல கமலாவை டிரம்ப் கட்டுப்படுத்த முடியவில்லை, என்று ஊடகங்கள் கூறியுள்ளனர்.

இதனால் இந்த முறை கமலா ஹாரிஸ்தான் வெல்வார் என்று முதல் கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+