ஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்!
நியூயார்க்: அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் அந்நாட்டு பிரபல ஹிப்ஹாப் பாடகர் கான்யே வெஸ்ட் போட்டியிட இருக்கிறார். ஹாலிவுட் நடிகை கிம் கார்டிஷியனின் கணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தற்போது அதிபர் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. அங்கு குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இதுவரை வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகள் அனைத்திலும் ஜோ பிடன் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் புதிய நபர் ஒருவர் போட்டியிட இருக்கிறார்.
அந்நாட்டு அதிபர் தேர்தலில் அந்நாட்டு பிரபல ஹிப்ஹாப் பாடகர் கான்யே வெஸ்ட் போட்டியிட இருக்கிறார். ஹாலிவுட் நடிகை கிம் கார்டிஷியனின் கணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக டிவிட் செய்துள்ள அவர், கடவுளை நம்புவதன் நாம் அமெரிக்காவின் வாக்கை காக்க வேண்டும். ஒரே குறிக்கோளுடன் நமது எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டும். அதனால் நான் அதிபர் தேர்தலில் போட்டியிட போகிறேன், என்று கான்யே வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
கான்யே வெஸ்டின்ன் இந்த அறிவிப்பை அவரின் மனைவி கிம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் ஆதரித்து இருக்கிறார்கள். ஆனால் கான்யே வெஸ்ட் உண்மையில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறாரா என்ற விவரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
இவர் இன்னும் அந்நாட்டு தேர்தல் ஆணையத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை. இவரை போலவே கான்யே டீஸ் நுட்ஸ் வெஸ்ட் என்பவர் பெயரை பதிவு செய்து இருக்கிறார். இதற்கு முன்பே கான்யே வெஸ்ட் இதேபோல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
2015லேயே 2020 தேர்தலில் போட்டியிட போவதாக கான்யே வெஸ்ட் அறிவித்து இருந்தார். அதன்பின் மீண்டும் 2024 தேர்தலில் போட்டியிட போவதாக கூறினார். ஆனால் தற்போது மீண்டும் 2020 தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று அறிவித்துள்ளார்.
இவர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பின மக்கள் பொதுவாக டிரம்பிற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்ற கருத்து உள்ள நிலையில், இவர் தீவிர டிரம்ப் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications