என்ன இது .. டிரம்ப் இப்படி கீழே இறங்கிட்டாரு.. மோடியை வச்சு விளம்பர வீடியோ ரிலீஸ்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி உடன் தான் இருக்கும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். நமஸ்தே டிரம்ப், ஹவுடி மோடி ஆகிய நிகழ்ச்சிகளின் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளது .
அமெரிக்கா தற்போது அதிபர் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. கொரோனா பிரச்சனை, உலக பொருளாதார சரிவு, சர்வதேச நாடுகளுக்கு இடையிலான மோதல் என்று பல விஷயங்களைக்கு இடையே இந்த தேர்தல் நடக்க உள்ளது.
அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

வாக்குகள்
இந்த தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவர்வதற்காக அதிபர் டிரம்ப் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பிரதமர் மோடி இடம்பெறும் காட்சிகள் உள்ளது. அதன்படி நமஸ்தே டிரம்ப், ஹவுடி மோடி நிகழ்ச்சியின் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளது. முதல் காட்சி அகமதாபாத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ ஆகும் .

யார் எல்லாம்
மனைவி மெலினா டிரம்ப், மக்கள் இவான்கா டிரம்ப் இடம்பெற்ற இந்த வீடியோவில் டிரம்ப் இந்தியா குறித்து பேசி இருப்பார். அதில் பேசிய மோடி, 2017ல் உங்கள் குடும்பத்தை நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்தினீர்கள். இப்போது நான் என் இந்திய குடும்பத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இதில் பெருமையாக உணர்கிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

என்ன மாதிரியான காட்சிகள்
அந்த வீடியோவில் வரும் இன்னொரு காட்சியில் டிரம்ப் ''அமெரிக்கா லவ்ஸ் இந்தியா'' என்று குறிப்பிட்டு இருப்பார். இந்தியாவை நாங்கள் மதிக்கிறோம். இந்தியாவின் உறவு எங்களுக்கு முக்கியம். இந்தியர்களின் உறவு எங்களுக்கு முக்கியம். இந்தியாவின் நம்பிக்கையான, அன்பான நெருங்கிய நண்பனாக எப்போதும் அமெரிக்கா இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். டிரம்ப் இப்படி இந்தியாவை புகழும் காட்சிகளும்.. மோடி டிரம்ப் கட்டிப்பிடிக்கும் காட்சிகளும் இதில் இடம்பெற்று இருந்தது.

மிக நெருக்கம்
மோடியுடன் தான் எவ்வளவு நெருக்கம். இந்தியா எனக்கு எவ்வளவு நெருக்கமான நட்பு நாடு என்பதை உணர்த்தும் வகையில் டிரம்ப் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 30-40 லட்சம் இந்தியர்கள் தேர்தல் முடிவை மாற்றும் திறன் கொண்டவர்களாக அமெரிக்காவில் உள்ளனர் என்பதால் இவர்களை கவர டிரம்ப், பைடன் இருவரும் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications