ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்.. இந்தியாவுக்கு எதிராக ஜி 7 நாடுகளையும் தூண்டிவிடும் அமெரிக்கா
நியூயார்க்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது வரிகளை விதிக்க வேண்டும் என்று ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராக கொண்ட ஜி 7 கூட்டமைப்பில் அமெரிக்கா மறைமுகமாக வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய யூனியனையும் இந்த விவகாரத்தில் அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், தற்போது ஜி 7 நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் கடும் எரிச்சல் அடைந்த அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தது. இதனால், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்த வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மீதுதான் கடுமையான வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்தியா மீது அமெரிக்கா வரி விதிப்பு
இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட 50 சதவீத வரியால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் நேரடியாக ஒப்புக்கொண்டார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி ரஷ்யாவை பொருளாதார ரீதியாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலப்படுத்துகின்றன என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆகும்.
எனினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே ரஷ்யாவுடன் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதாகவும் கூறியது. எனினும், இந்தியா மீது தொடர்ந்து இந்த விவகாரத்தில் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தில் உள்ள தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ஜி 7 நாடுகளையும் தூண்டி விடும் அமெரிக்கா
இது ஒருபக்கம் என்றால், இந்தியாவுக்கு எதிராக வரி விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். அதோடு நிற்காமல் தற்போது ஜி 7 நாடுகளையும் அமெரிக்கா தூண்டிவிடுவது அம்பலமாகியுள்ளது. நேற்று ஜி 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் கருவூல செயலர் ஸ்காட் பெசண்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் போது ஜி 7 நாடுகளையும் வரி விதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் அமெரிக்க பிரதிநிதிகள். "ரஷ்யாவின் வருவாய் சக்திகளை ஒருங்கிணைந்து நிறுத்தினால்தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். ரஷ்யாவுக்கு பொருளாதார அழுத்தங்கள் கொடுப்பதன் மூலம் முட்டாள்தனமான கொலைகளை நிறுத்த முடியும்" என்று அமெரிக்கா வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா, சீனாவுக்கு வரி விதிக்க வேண்டும்
இந்த அறிக்கை வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அமெரிக்காவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "புதினின் போர் இயந்திரத்தை ஊக்குவிப்பது போல இந்தியா மற்றும் சீனாவின் எண்ணெய் கொள்முதல் அமைந்துள்ளது.
எனவே இந்தியா மற்றும் சீனாவின் பொருட்களுக்கு அர்த்தமுள்ள வரிகளை விதிக்க வேண்டும். இரு நாடுகளும் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்குவது மோதலை நீடிப்பதாக உள்ளது. போர் முடியும் நாளில் இந்த வரிகள் ரத்து செய்யப்படும்" என்றார்.
ஜி 7 நாடுகள்
இதன் தொடர்ச்சியாகவே ஜி 7 நாடுகளை மேற்கண்டவாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜி 7 கூட்டமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஜி 7 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது கனடா வகிக்கிறது.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications