சவுதி, இஸ்ரேல்.. 7 நாடுகளுக்கு திடீர் டிரிப் அடிக்கும் டிரம்ப்பின் "இடது கை".. களமிறங்கும் பாம்பியோ!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நெருக்கமான நபரும், அமெரிக்க அரசின் ஸ்டேட் செக்ரட்டரியுமான மைக் பாம்பியோ 7 நாடுகளுக்கு அவசர பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள நிலையில் பாம்பியோ இப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்க மறுத்து டிரம்ப் போர்க்கொடி தூக்கி உள்ளார். தேர்தலில் இனிதான் வெற்றிபெற போகிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
214 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று இருக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். 290 வாக்குகளை பெற்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் டிரம்ப் இன்னும் தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை.

தோல்வி
அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்படி பிரச்சனைகள் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் ஸ்டேட் செக்ரட்டரி மைக் பாம்பியோ 7 நாடுகளுக்கு அவசர பயணம் மேற்கொள்ள உள்ளார். டிரம்பிற்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்படும் பாம்பியாவின் வெளிநாட்டு பயணம் அதிக கவனம் பெற்றுள்ளது. பொதுவாக டிரம்ப் பிரச்சனைகளில் சிக்கும் நேரங்களில் பாம்பியோதான் டேமேஜ் கண்ட்ரோலர் போல செயல்படுவார்.

வெளிநாடு பயணமும்
இந்த நிலையில் திடீரென இவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அதிலும் இவர் பயணம் மேற்கொள்ளும் நாடுகள் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டிற்கு பாம்பியோ பயணம் மேற்கொள்கிறார். பின் அங்கிருந்து ஜார்ஜியா செல்கிறார்.

ஜார்ஜியா
பின் ஜார்ஜியாவில் இருந்து இஸ்ரேல் செல்லும் பாம்பியோ.. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். சவுதி அரேபியா, அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு பாம்பியோ பயணம் மேற்கொள்ள உள்ளார். அமைதி மற்றும் ஒற்றுமையை குறிக்கோளாக கொண்டு இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக.. மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று இருக்கும் பிடனுக்கு பிரான்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. டிரம்ப் - பிரான்ஸ் இடையே பெரிய அளவில் உறவு இல்லாத நிலையில், பாம்பியோ தற்போது பிரான்ஸ் செல்கிறார். அதே சமயம் இன்னொரு பக்கம் இஸ்ரேல், சவுதி, அமீரகம், கத்தார் ஆகிய நாடுகள் டிரம்பிற்கு நெருக்கமான நாடுகளாக உள்ளது.

பிடன் வாழ்த்து
ஆனால் இந்த நாடுகளும் கூட பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான்.. தற்போது பாம்பியோ இந்த நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்ய உள்ளார். அதிபர் பதவி மாறுதலுக்கான டிரான்சிஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த திடீர் பயணம் ஏன் என்று தெரியவில்லை. பெரிய அளவில் வெளிப்படையான காரணங்கள் இதில் குறிப்பிடவில்லை.

வேறு திட்டம்
அதிலும் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நேரத்தில் இந்த பயணம் நடக்க உள்ளது. பெரும்பாலும் மீதம் இருக்கும் 2 மாத உறவு, இனி வரும் நாட்களில் அமெரிக்காவுடனான உறவு குறித்து இவர்கள் பேச வாய்ப்புள்ளது. டிரம்ப் வேறு ஏதாவது திட்டங்களை மனதில் வைத்தும் கூட பாம்பியாவை இப்படி அனுப்பி இருக்கலாம்.. பாம்பியோ செல்லும் 7 நாடுகளும் வலிமை வாய்ந்த நாடுகள் எனபதால், இந்த பயணம் கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications