ஓஹோ.. எனக்கே ஸ்கெட்சா.. கண்சிவந்த டிரம்ப்.. பாகிஸ்தானுக்கு பறந்த கடும் வார்னிங்.. மேட்டர் இதுதான்
நியூயார்க்: அமெரிக்காவை குறிவைத்து அணுஆயுதத்தை சுமந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பாகிஸ்தான் ரகசியமாக தயாரித்து வருகிறது. இதற்கு சீனா உதவி செய்யும் நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறை கண்டுபிடித்து அதுபற்றி டொனால்ட் டிரம்ப்பிடம் அறிக்கையாக அளித்துள்ளது. இதனால் கண்சிவந்துள்ள டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு கடும் வார்னிங்கை செய்துள்ளார்.
பாகிஸ்தான் VS அமெரிக்கா.. ஒரு காலத்தில் இருநாடுகளும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகள் இடையேயான நட்பில் விரிசல் விழுந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக ஜோபைடன் இருந்த நான்காண்டு காலத்தில் இருநாடுகள் இடையேயான உறவில் மோசமானது.

அதோடு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தபோது அவர் அமெரிக்காவை நேரடியாக குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் சதியில் தான் ஆட்சியை பறிகொடுத்ததாக புகார் தெரிவித்தார். இதனால் அமெரிக்கா - பாகிஸ்தான் விரிசல் மோசமானது. ஆனால் இப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு மெல்ல மெல்ல நல்ல நிலைக்கு செல்கிறது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது டொனால்ட் டிரம்ப் மோதலை கைவிட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தினர். அதோடு மோதலை கைவிட்டால் இருநாடுகளும் இணைந்து வர்த்தகம் செய்யலாம் என்ற ஆஃபரை வழங்கினார்.
அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு கூட வாஷிங்டனில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் மதிய விருந்து அளித்தார். பூட்டிய அறையில் இருவரும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் விமானதளம், ராணுவ தளத்தை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதை செய்தால் பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்வதாகவும், வர்த்தக உறவை வலுப்படுத்துவதாக டிரம்ப் கூறினார்.
இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே பாகிஸ்தானின் பெரிய சதியை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்தது. அதாவது பாகிஸ்தான் தற்போது அணுஆயுதத்தை சுமந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் (Nuclear Tipped Intercontinental Ballistic Missile)ஏவுகணையை ரகசியமாக தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளதாம். இந்த ஏவுகணை அணுஆயுதத்தை சுமந்து செல்லும் தன்மை கொண்டது. சுமார் 5,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் தன்மை கொண்டதாக இந்த ஏவுகணையை சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது.
இது அமெரிக்காவுக்கு நேரடியான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதனை பாகிஸ்தான் மிகவும் ரகசியமாக வைத்திருந்த நிலையில் அதனை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்து டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்துள்ளது. இதை கேட்டவுடன் டிரம்ப் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. கண்கள் சிவக்க கோபமாகி உள்ளது. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது எனக்கே ஸ்கெட்ச் போடுறீங்களா? என பாகிஸ்தான் மீது கோபத்தை கொப்பளித்துள்ளார்.
மேலும் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானுக்கு வார்னிங் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா பொறுத்து கொள்ளாது. அதேபோல் தான் அணுஆயுதத்தை சுமந்து செல்லும் லாங்க் ரேஞ்ச் ஏவுகணை திட்டத்தையும் சகித்து கொள்ளமாட்டோம்'' என்று கூறியுள்ளார். இது பாகிஸ்தானுக்கான நேரடி வார்னிங்காக பார்க்கப்படுகிறது.
மேலும் பாகிஸ்தானின் இந்த செயல் என்பது அமெரிக்காவின் அடிவயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அணுஆயுதம் பரவல் தடை ஒப்பந்தம் ( Nuclear Non-Proliferation Treaty or NPT) அல்லது விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty or CTBT) என எதிலும் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் என்றால் அணுஆயுதம் வைத்திருந்தாலும் கூட பல கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் காஷ்மீர் பிரச்சனையை மையப்படுத்தி பாகிஸ்தான் இதுபோன்ற ஒப்பந்தங்களுக்குள் செல்லவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. அதேபோல் இருநாடுகளிடமும் அணுஆயுதம் உள்ளது. இதனால் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்குள் சென்றால் சிக்கல் வரும் என்பதால் நம்மை போலவே பாகிஸ்தானும் அந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இதனால் அமெரிக்கா - பாகிஸ்தான் பிரச்சனை வந்தால் எளிதாக பாகிஸ்தானால் அணுஆயுதத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உள்ளது. இதனால் தான் டொனால்ட் டிரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications