யூதர்கள் எல்லோரும் சாக வேண்டும்.. கோஷமிட்டு சரமாரியாக சுட்ட இளைஞர்.. அமெரிக்காவில் 11 பேர் பலி!
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் நகரில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ராபர்ட் போவர்ஸ் என்று நபர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளார்.
இதில் பல காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

என்ன நடந்தது
நேற்று பிட்ஸ்பெர்க்கின் மாளிகை ஒன்றில், குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா ஒன்று நடந்துள்ளது. அங்கு இரண்டு பெரிய துப்பாக்கிகளுடன் நுழைந்த ராபர்ட் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். கட்டிடத்தை விட்டு வெளியே ஓட முயன்றவர்களையும் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

எத்தனை பேர்
இதில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 22 பேர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மோசமான உடல்நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன
அங்கு குழுமி இருந்த அனைவரும் யூதர்கள் என்று கூறப்படுகிறது. ராபர்ட் அவர்களை சுடும் முன், யூதர்கள் எல்லோரும் சாக வேண்டும் என்று கூறிவிட்டு சுட்டுள்ளார். யூதர்களுக்கு எதிரான கொள்கையான ''ஆன்டிசெமிட்டிசம்'' கொள்கை காரணமாக அவர் இப்படி நடந்து கொண்டுள்ளார்.

தூக்கு தண்டனை
இந்த நிலையில் ராபர்டை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று அவர் நீதிபதிகள் முன் ஆஜர் செய்யப்படுவார். அவருக்கு பெரும்பாலும் தூக்கு தண்டனை கொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் துப்பாக்கி சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications