மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்
நியூயார்க்: அமெரிக்காவின் பெருமை, 'அசைக்க முடியாத சக்தி', 'எதிரி கண்களுக்குத் தெரியாத மாயாவி' என வர்ணிக்கப்பட்ட எஃப்-35 (F-35) போர் விமானத்தின் பிம்பம், ஈரான் வான்பரப்பில் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகால உழைப்பு, 400 பில்லியன் டாலர் முதலீடு என உலக வரலாற்றிலேயே மிக விலையுயர்ந்த ராணுவத் திட்டமாக உருவெடுத்த இந்த விமானம், ஒரு சாதாரணத் தொழில்நுட்பத்திடம் சிக்கித் தவிப்பதுதான் இப்போது சர்வதேச ராணுவ வட்டாரத்தின் ஹாட் டாபிக்.

ரடார் கண்களுக்குத் தெரியாத 'கடவுள்'?
எஃப்-35 என்பது வெறும் போர் விமானம் மட்டுமல்ல; அது அமெரிக்காவின் ராணுவத் திமிர். "எங்கள் ஏவுகணைகளுக்கும், சென்சார்களுக்கும், ஏன் உங்கள் பிரார்த்தனைகளுக்கும் கூட எட்டாத உயரத்தில் நாங்கள் இருக்கிறோம்" என உலகம் முழுமைக்கும் அமெரிக்கா விடுத்த பகிரங்க அறைகூவல் அது. ரடார் திரையில் இதைக் கண்டுபிடிக்க முடியாது, இன்ஃப்ராரெட் கதிர்களால் மோப்பம் பிடிக்க முடியாது என்பதுதான் இதன் 'யுஎஸ்பி' (USP).
ஆனால், இந்த 'மெமோ' ஈரானுக்குப் போய்ச் சேரவில்லை போலிருக்கிறது!
மாட்டிக்கொண்ட மாயாவி
மார்ச் 19, 2026. ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த எஃப்-35 விமானத்தை, ஈரானின் 'IRST' (Infrared Search and Track) சிஸ்டம் மிக எளிதாகக் கண்டறிந்து லாக் (Lock) செய்துள்ளது. ஈரானிய இன்ஜினியர்கள் ஏதோ மாயாஜாலம் செய்துவிடவில்லை. மிக எளிமையான அறிவியல் தான் இதற்குக் காரணம்.
எஃப்-35 விமானம் எவ்வளவு தான் ரடாருக்குத் தெரியாத வடிவம் கொண்டிருந்தாலும், அதன் என்ஜின் வெளிப்படுத்தும் வெப்பம் மிக அதிகம். விண்வெளியில் எரியும் ஒரு பெரிய அடுப்பைப் போல, அந்த விமானத்தின் வெப்பத்தை (Heat Signature) ஈரானின் சென்சார்கள் எளிதாகப் பிடித்துவிட்டன. சுருக்கமாகச் சொன்னால், "திருடன் கறுப்பு உடை அணிந்து இருட்டில் மறைந்திருந்தாலும், அவன் கையில் வைத்திருக்கும் எரியும் டார்ச் லைட் அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது."
கசிந்த ரகசியம்: கலக்கத்தில் பென்டகன்
ஈரான் இப்போது கையில் வைத்திருக்கும் அந்த 'ஹீட் சிக்னேச்சர்' தரவுகள், வெறும் தகவல் மட்டுமல்ல; அது அமெரிக்காவின் எதிரிகளான மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிற்கு ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். அதுதான் ரஷ்யா - சீனாவிற்கு அமெரிக்கா போட்டுக்கொடுத்த எளிதான வழி! எஃப்-35 விமானத்தை வீழ்த்த முடியுமா என்று இத்தனை காலம் யோசித்துக் கொண்டிருந்த நாடுகளுக்கு, "தாராளமாகச் செய்யலாம், அதற்கான வழி இதோ!" என்று விடை கிடைத்துவிட்டது.
தொழில்நுட்பத்தை விடப் பெரிய பாதிப்பு
இந்தத் தோல்வி மென்பொருளிலோ அல்லது விமானத்தின் மேல்பூச்சிலோ (Coating) இருக்கும் குறைபாடு அல்ல. இது ஒரு போர் விமானியின் நம்பிக்கையைச் சிதைக்கும் விஷயம். இனி ஒவ்வொரு முறை எஃப்-35 விமானத்தை இயக்கும்போதும், "கீழே இருப்பவன் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பானோ?" என்ற சந்தேகம் ஒவ்வொரு விமானிக்கும் எழும். ஆக்ரோஷமாகப் பாய வேண்டிய இடத்தில் தயக்கம் குடிபுகும்.
400 பில்லியன் டாலர்... 30 ஆண்டுகாலத் தவம்... கடைசியில் ஒரு சாதாரண ஹீட் சென்சாரிடம் தோற்றுப் போயிருப்பது அமெரிக்காவிற்குப் பெரும் தலைகுனிவுதான். தொழில்நுட்ப உலகில் 'யாரும் வெல்ல முடியாதவர்' என எவருமில்லை என்பதை ஈரான் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications