30% சான்ஸ் இருக்கு.. எல்லாம் மொத்தமாக காலியாக போகும்.. ஐடி ஊழியர்களுக்கு.. மிகப்பெரிய வார்னிங்
நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்த 12 மாதங்களுக்குள் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 30% ஆக உள்ளதாக S&P குளோபல் ரேட்டிங்ஸின் தலைமை அமெரிக்கா மற்றும் கனடா பொருளாதார நிபுணர் சத்யம் பாண்டே தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இது 35% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. பரஸ்பர வரிவிதிப்பால், 2வது நாளாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு அடைந்து உள்ளது. DOW JONES பங்குச்சந்தையில் 2000 புள்ளிகள் சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்க மற்றும் உலக மார்க்கெட் சரிவு குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். உலக மார்க்கெட் தினம் தினம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள தகவல் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் டாப் நிறுவனங்கள் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள். இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை விழுந்தால் அதை தொடர்ந்து இந்திய, இங்கிலாந்து போன்ற பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
கணிப்பு
சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.
இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமா தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார்.
பாதிக்கப்படும் ஐடி ஊழியர்கள்
இது ஐடி துறையில் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால், நிறுவனம் தற்போது மறுசீரமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
பணிநீக்கங்களைத் தவிர, 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான டிசிஎஸ்-இன் பணிவிலகல் விகிதம் முந்தைய காலாண்டின் 13.3% ஐ விட, கடந்த பன்னிரண்டு மாதங்களில் 13.8% ஆக சற்று அதிகரித்துள்ளது. உலகளாவிய சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகிள், அதன் செயற்கை நுண்ணறிவு அமைப்பை விரைவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வடிவமைப்பு தொடர்பான பணிகளில் இருந்த 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் தனது பலத்தை அதிகரிக்கவும், மற்ற துறைகளில் செலவுகளைக் குறைக்கவும் முயன்றபோது இந்த பணிநீக்கங்கள் நிகழ்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications
