மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. வெளிப்படையாக பார்த்தால் இது அமெரிக்காவின் வெற்றி போல தோன்றலாம். ஆனால் இதற்கு பின் ஈரானின் வெற்றி ஒளிந்திருப்பதாக கூறுகிறார்கள்.

சர்வதேச அரசியலில் இன்று ஒரு நிலநடுக்கமே ஏற்பட்டுள்ளது. "நாகரிகமே அழிந்துவிடும்" என்று மார் தட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அடுத்த சில மணிநேரங்களில் ஈரானின் நிபந்தனைகளுக்குப் பணிந்து போனது, உலக வரலாற்றில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராஜதந்திரத் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.

gold rate silver investment

இது வெறும் போர் நிறுத்தம் அல்ல, அமெரிக்காவின் 'மேலாதிக்கம்' (Hegemony) வீழ்ந்ததன் அடையாளம் எனப் பல நாடுகள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி: ஈரானின் 'செக் மேட்'!

உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz), இப்போது அதிகாரப்பூர்வமாக ஈரானின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

அமெரிக்காவின் தோல்வி: இத்தனை காலமாக "சர்வதேச நீர்வழிப் பாதையில் சுதந்திரம் வேண்டும்" என முழங்கிய அமெரிக்கா, இப்போது ஈரானின் ராணுவ ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே கப்பல்கள் செல்ல முடியும் என்ற ஈரானின் நிபந்தனையை (Technical Coordination) ஏற்றுக் கொண்டுள்ளது.

விலை போன மிரட்டல்: ட்ரம்ப் விதித்த 8 மணி நேர கெடுவை ஈரான் துச்சமாக மதித்ததும், அதற்குப் பதிலாக ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்ததும், ஈரானின் ராணுவ பலத்திற்கு கிடைத்த வெற்றியாக ஈரான் ஆதரவு ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

தடைகள் நீக்கம்: வெள்ளை மாளிகையின் சரணாகதியா?

ஈரான் முன்வைத்த 10 அம்சத் திட்டத்தில், "அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும்" என்ற கோரிக்கை பிரதானமாக இருந்தது.

ட்ரம்ப்பின் பல்டி: ஆரம்பத்தில் "தடைகளை நீக்க முடியாது" என்று சொன்ன அமெரிக்கா, இப்போது ஈரானின் திட்டத்தை வேலை செய்யக்கூடிய விஷயம்தான் (Workable basis) என ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது இதை சரி செய்ய போகிறோம்.. தடைகளை நீக்க போகிறோம்.. பாக்கலாம் என்பது போல இறங்கி வந்துள்ளது.

முடக்கப்பட்ட பணம்: அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பல பில்லியன் டாலர் நிதியை விடுவிப்பதற்கும் அமெரிக்கா சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இது ஈரானின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய புத்துயிர் அளிக்கும்.

உலக நாடுகள் பார்ப்பது என்ன?

ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து ஈரான்: ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதைப் போலவே, ஈரானிடமும் அமெரிக்கா பணிந்துவிட்டதோ என்ற சந்தேகம் அதன் நட்பு நாடுகளான இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் & சீனாவின் ஆதிக்கம்: அமெரிக்காவால் செய்ய முடியாததை பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து முடித்திருப்பது, ஆசியாவில் சீனாவின் பிடி பலமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

வீழ்ந்த வல்லரசு பிம்பம்: "நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் தாக்குவோம்" என்ற அமெரிக்காவின் பழைய பாணி மிரட்டல், ஈரானிடம் எடுபடவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

இது ஒரு தற்காலிக அமைதியாக இருந்தாலும், ஈரானின் பிடிவாதம் ஜெயித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது விருப்பப்படி மூடுவதும் திறப்பதும் இனி சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை அமெரிக்கா முழுமையாகப் பின்வாங்கினால், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு 'வரலாற்றுப் பக்கங்களில்' மட்டுமே இருக்கும்.

அமெரிக்கா நிஜமாகவே தோற்றுவிட்டதா அல்லது இது ட்ரம்ப்பின் அடுத்த 'மாஸ்டர் பிளான்' ஆ? - காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+