என்னா வேகம்.. கொள்ளை அழகு.. நம்ம டிரம்ஸ் சிவமணிக்கே டஃப் கொடுக்கும் போலயே இந்தக் குட்டிப்பாப்பா!
நியூயார்க்: டிரம்ஸ் சிவமணிக்கே டஃப் கொடுக்கும் வகையில் டிரம்ஸ் வாசித்து அசத்தும் 5 வயது சிறுமியின் வீடியோ நெட்டிசன்களை அசர வைத்துள்ளது.
சேட்டை செய்யும் குழந்தைகளின் க்யூட்டான வீடியோக்கள் பார்க்க பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களோ நம்மை ஆச்சர்யப் படுத்தும். இந்த சிறு வயதில் இப்படி ஒரு திறமையா என அந்தக் குழந்தைகளை மனதார பாராட்ட வைக்கும். அந்த வகையில் தற்போதும் ஒரு குழந்தையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் ஒரு 5 வயது சிறுமி டிரம்ஸ் வாசிக்க ஆயத்தமாகிறாள். ஒரு சில நொடிகளில் அந்த சிறுமி டிரம்ஸ் வாசிக்க தொடங்குகிறாள். அவள் டிரம்ஸ் வாசிப்பதை பார்க்கும் போது நம் கண்களை நம்மாலேயே நம்ம முடியவில்லை. அத்தனை வேகமாக ரசித்து ரசித்து டிரம்ஸ் வாசிக்கிறாள் அந்த குட்டி பெண்.
ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஒரு நொடிக்கூட அந்த சிறுமி அசரவில்லை. அவளது கைகளும் கால்களும் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றன. டிரம்ஸ் வாசிப்பதோடு அந்தக் குட்டிப் பெண் கைகள் டிரம்ஸ் வாசிக்கும் குச்சிகள் செய்யும் சாகசங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. இந்த சிறிய வயதில் இத்தனை திறமையா என வாயடைக்க வைத்து விடுகிறாள் அந்த சிறுமி.
5-years old.
— Rex Chapman🏇🏼 (@RexChapman) October 25, 2020
Unreal... pic.twitter.com/JfWjBnJ0KV
அவள் டிரம்ஸ் வாசிப்பதை பார்க்கும் போது நம்மூர் டிரம்ஸ் சிவமணிக்கே டஃப் கொடுப்பாலோ என தோன்றுகிறது. பெயர் தெரியாத அந்த சிறுமிக்கு, உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் அந்தச் சிறுமி எதிர்காலத்தில் மிகப்பெரிய டிரம்ஸ் கலைஞராக வருவாள் என்பதில் சந்தேகமேயில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications