அதென்ன கையில வெள்ளையா நம்மள மாதிரியே.. ஆச்சர்யத்தில் வாய் பிளக்கும் வெள்ளை திமிங்கலம்
பொம்மை திமிங்கலத்தை பார்த்து உற்சாகமடையும் வெள்ளை திமிங்கிலத்தின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது.
நியூயார்க்: சிறுமியின் கையில் இருக்கும் பொம்மையை பார்த்து உற்சாகத்தில் வாய்பிளக்கும் வெள்ளை திமிங்கிலத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
சமூகவலைதளங்களில் ஏராளமான வைரல் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதுவும் மனிதர்கள் - விலங்குகள் இடையே நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் வீடியோக்கள் என்றால் கொஞ்சம் அதிக லைக்ஸ்களை அள்ளுவது இயல்பு தான்.
அந்த வகையில் தற்போது வெள்ளை திமிங்கிலம் ஒன்றின் 'ரியாக்ஷன்' வீடியோ வைரலாகி வருகிறது.

வெள்ளை திமிங்கலம்
சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள ஒரு மீன்கள் அருங்காட்சியகத்தில் ஒரு தாயும், மகளும் (சிறுமி) நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு கண்ணாடி தடுப்பிற்கு பின்பக்கம் வெள்ளை திமிங்கிலங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதனை தாயும், மகளும் ரசித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அது பொம்மை பாஸ்
சிறுமி தனது கையில் வெள்ளை திமிங்கில பொம்மை ஒன்றை வைத்திருக்கிறாள். அப்போது அவர்களுக்கு அருகில் வெள்ளை திமிங்கிலம் ஒன்று வருகிறது. சிறுமியை உற்றுப் பார்க்கும் அந்த திமிங்கிலம், சிறுமியின் கையில் தன்னைப் போலவே ஒரு திமிங்கிலம் இருப்பதைக் கண்டு வியந்து போகிறது. உற்சாகத்தில் வாய்ப்பிளந்து சத்தம் போடுகிறது இந்த வெள்ளை திமிங்கிலம்.

திட்டம்
இந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள சிறுமியின் தாய், " இந்த திமிங்கிலம் இப்படி ரியாக்ட் செய்யும் என எதிர்பார்த்து தான் நாங்கள் அந்த பொம்மையை வெளியே இருந்து வாங்கிச் சென்றோம். எதிர்பார்த்தபடியே அது ரியாக்ட் செய்துவிட்டது", என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்கள் மாதிரி
வெள்ளை திமிங்கிலங்கள் பொதுவாக ஒரு அரிய வகை உயிரினமாகும். இந்த வகை திமிங்கிலங்கள் குழுக்களாக வாழக் கூடியவை. மனிதர்களை போலவே தங்களுக்குள் தகவல் தொடர்பு வைத்திருக்க கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications