“சந்தோசத்துல பெரிய சந்தோசமே”.. வைரலாகும் வீடியோ.. நஷந்ராவைப் பாராட்டும் நெட்டிசன்கள்!

வாடிக்கையாளர் வீட்டு வாசலில் சிற்றுண்டி இருப்பதை கண்டு உற்சாகத்தில் நடனமாடிய தொழிலாளி.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிக்கையாளர் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டியை எடுத்துக்கொண்ட தொழிலாளி ஒருவர் உற்சாகத்தில் நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்களுடைய வீட்டில் குடில் அமைப்பது கிறிஸ்துவர்களின் வழக்கம். மேலும் அந்த குடிலில் குழந்தைகளுக்கு சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வைத்திருப்பர்.

Viral video of delivery worker dancing with joy after finding snacks on doorstep

அந்த வகையில் அமெரிக்காவின் மிஸிசிபி மாநிலத்தில் உள்ள ஜாக்சன் நகரை சேர்ந்த நஷந்ரா ஜேம்ஸ் எனும் பெண்மணி தனது வீட்டு வாசலில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து, அதில் சாக்லேட் உள்ளிட்ட பரிசு பொருட்களை வைத்திருந்தார்.

நஷந்ரா வீட்டிற்கு பார்சல் பொருட்களை விநியோகிக்க சென்ற பெண் தொழிலாளி மிமி சந்லர், அங்கு வைக்கப்பட்டிருந்த பரிசு பொருட்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அதிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்துக்கொண்ட மிமி, கதவில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை நோக்கி நன்றி சொல்லிவிட்டு, உற்சாகத்தில் நடனமாடிக்கொண்டே தனது வாகனத்தை நோக்கி சென்றார்.

இந்த காட்சிகளை நஷந்ரா ஜேம்ஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், தொழிலாளி மிமியின் உற்சாக நடனத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில பண்டிகைகளின் நோக்கமே தான் மட்டும் மகிழ்ச்சி அடையாமல், மற்றவர்களையும் மகிழ்ச்சி அடைய வைப்பது தான். அந்தவகையில் நஷந்ரா சிறப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடி வருவதாக நெட்டிசன்கள் அவரைப் பாராட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+