விர்ஜின் கேலடிக்.. இந்திய பெண்ணுடன் இன்று விண்ணுக்கு செல்லும் யூனிட்டி விண்கலம்.. சாதித்த ரிச்சர்ட்!
நியூயார்க்: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விர்ஜின் கேலடிக் இன்று விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்ய உள்ளது. விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சர் ரீச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா அடங்கிய குழு இந்த டெஸ்ட் சோதனையில் விண்ணுக்கு செல்கிறார்கள்.
Recommended Video
உலக அளவில் பெரு நிறுவனங்களுக்கு இடையில் தற்போது மிகப்பெரிய ஸ்பேஸ் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக உலகின் முன்னணி பணக்காரர்களான எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஜெப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனங்கள் இடையே கடும் ஸ்பேஸ் போட்டி நிலவி வருகிறது.
இந்த ஸ்பேஸ் போட்டியில் வேகமாக முன்னேறி வரும் இன்னொரு பிரிட்டிஷ் கோடீஸ்வரர்தான் சர் ரீச்சர்ட் பிரான்சன். விர்ஜின் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் இவர்தான். விர்ஜின் கேலடிக் நிறுவனத்தை தொடங்கி ஸ்பேஸ் ஆராய்ச்சிகளை இவர் செய்து வருகிறார்.

எப்படி செல்லும்
இந்த விர்ஜின் கேலடிக் இன்று விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்ய உள்ளது. விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சர் ரீச்சர்ட் பிரான்சன் இதில் விண்ணுக்கு செல்ல இருக்கிறார். இந்த நிறுவனத்தின் விஎஸ்எஸ் யூனிட்டி என்ற விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட உள்ளது. விஎம்எஸ் ஈவ் (ஈவ் என்பது ரிச்சர்டின் தாயார் பெயர்) என்ற இரட்டை எஞ்சின் கொண்ட கேரியர் விமானம் மூலம் இந்த ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படும்.

பயணம்
அதாவது ஓசோன் லேயர் முடியும் தூரம் அல்லது 25 கிமீ உயரம் வரை இரட்டை கொண்ட விஎம்எஸ் ஈவ் விமானம், இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலத்தை சுமந்து விண்ணுக்கு செல்லும். இந்த யூனிட்டி விண்கலம் விமானத்தின் நடுப்பகுதியில் இரண்டு என்ஜின்களுக்கு இடையில் பொருத்தப்பட்டு இருக்கும். 25 கிமீ தூரம் சென்ற பின் விஎம்எஸ் ஈவ் விண்கலம் விமானத்தில் இருந்து கழன்று கொண்டு, விண்வெளியை நோக்கி பறக்கும்.

எவ்வளவு தூரம்
மொத்தமாக இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலம் மனிதர்களோடு விண்வெளிக்கு சென்றுவிடாது.இது டெஸ்ட் பிளைட்தான். இந்த ராக்கெட் 85-90 கிமீ உயரம் வரை விண்வெளிக்கு செல்லும். கிட்டத்தட்ட மீசோஸ்பியரை நெருங்கும் உயரம் வரை இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலம் பறக்கும். அங்கு புவிஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக இருக்கும். விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் இதனால் மிக மிக லேசாக மிதப்பார்கள்.

எப்படி உணர்வார்கள்
அதன்பின் மேலே இந்த விண்கலம் வெற்றிகரமாக மிதந்தபின் எஞ்சின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி திரும்பி வரும். சரியாக 4 நிமிடம் மேலே இருந்துவிட்டு அதன்பின், விஎம்எஸ் யூனிட்டி விண்கலம் பூமிக்கு திரும்பி வரும். மொத்தமாக இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலம் பயணம் 90 நிமிடங்கள் ஆகும். இன்று மாலை 6 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ஸ்பேஸ்போர்ட் அமெரிக்க ஏவுதளத்தில் இருந்து இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலம் ஏவப்படும், அதன்பின் அங்கேயே மீண்டும் விஎம்எஸ் யூனிட்டி விண்கலம் விமானம் போல லேண்டாகும்.

யாரெல்லாம் செல்கிறார்கள்
இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலத்தில் விர்ஜின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் இடம்பெறுவர். அதேபோல் இரண்டு பைலட்கள் டேவ் மெக்காய், மைக்கல் மசூச்சி இடம்பெறுவார்கள். இதுபோக மூத்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெத்த மோசஸ், எஞ்சினியர் கோலின் பென்னட், ஆராய்ச்சியாளரும் இந்தியாவை சேர்ந்தவருமான ஸ்ரீஷா பண்ட்லா இடம்பெறுவார்கள்.

இந்திய பெண்
விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக ஸ்ரீஷா பாண்ட்லா இருக்கிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஆந்திராவை சேர்ந்தவர். விண்வெளிக்கு பறக்கும் மூன்றாவது இந்திய பெண்மணி ஆவார் இவர். இவர்கள் போக இரட்டை ஜெட் விமானத்தை இயக்கும் சிஜி ஸ்டார்க்கோவ், கெல்லி ஆகியோரும் இந்த பயணத்தில் இடம்பெற உள்ளனர்.

ஸ்பேஸ் போட்டி
ஜெப் பெஸோஸ், எலோன் மஸ்க் ஆகியோர் விண்ணுக்கு செல்ல துடித்துக் கொண்டு இருக்கும் போது ரிச்சர்ட் முதல் கோடீஸ்வரராக விண்ணுக்கு செல்கிறார். ரிச்சர்ட்டின் விர்ஜின் கேலடிக் நிறுவனம் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு மனிதர்களை சோதனை முறையாக அனுப்பி வெற்றிகரமாக திருப்பி கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாதமே ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மூலம் விண்ணுக்கு செல்லும் திட்டத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications