அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்வாங்கும் விவேக் ராமசாமி! டொனால்ட் டிரம்ப் தகுதி நீக்கத்தால் ட்விஸ்ட்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து டொனால்ட் டிரம்ப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் போட்டியிடவில்லையெனில் தானும் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியரான விவேக் ராமசாமி அறிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அதிபராக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன், மீண்டும் அதிபராக போட்டியிட இருக்கிறார். அதேபோல குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் அதிபர் பதிவிக்காக போட்டியிடுகிறார். ஆனால் டிரம்புக்கு ஏராளான தடைகள் இந்த தேர்தலில் இருக்கிறது.

கடந்த முறை தேர்தலில் தோல்வியுற்றபோது அவரது ஆதரவாளர்கள் பெரும் கிளர்ச்சியை உருவாக்கினர். வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அமெரிக்க வரலாற்றில் அதுபோன்ற ஒரு போராட்டத்தை நாடு இதற்கு முன்னர் சந்திக்காத வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். ஆனால், அவர்கள் ஆயுதம் கொண்டு தாக்கியதால், நிலைமை மோசமானது. எனவே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இது டிரம்ப் மீது மிக்பெரிய ப்ளாக் மார்க்கை ஏற்படுத்தியது. ஆதரவாளர்களைத் திரட்டி அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவோர் பதவியில் இருக்க முடியாது என்பது அமெரிக்க அரசியலமைப்பின் விதி. ஆனால் இந்த விதியின் அடிப்படையில் மிகவும் அரிதாகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. டிரம்ப் விஷயத்தை பொறுத்த அளவில், கொலராடோ நீதிமன்றம் இந்த விதியின் அடிப்படையில் டிரம்பை வரவிருக்கும் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்தது. மட்டுமல்லாது, டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு தகுதியற்றவர் என்றும் கண்டித்திருந்தது.
இது அமெரிக்க அரசியல் வரலாற்றி கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு டிரம்பின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ரேசில் இருக்கும் இந்திய வம்சாவளியரான விவேக் ராமசாமி, “டிரம்ப் போட்டியிடவில்லையெனில் தானும் போட்டியிலிருந்து விலகுவதாக” அறிவித்திருக்கிறார்.
அதாவது, “இந்த தீர்ப்பை சட்ட விரோதமாக பார்க்கிறேன். ஆரம்ப கட்ட தேர்தலில் போட்டியிட டிரம்ப் அனுமதிக்கப்படா விட்டால், நானும் போட்டியில் இருந்து விலகுவேன். குடியரசு கட்சி மற்ற வேட்பாளர்களும் இதே போன்று விலக வேண்டும். இல்லை என்றால், அவர்கள் இந்த சட்ட விரோத சூழ்ச்சியை அமைதியாக அங்கீகரிக்கிறார்கள் என அர்த்தமாகிவிடும். இது அமெரிக்காவிற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல் முறையீடு செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டிரம்பிற்கு மரண அடி கொடுத்த நீதிமன்றம்.. H-1B விசா கட்டண உயர்வு ரத்து.. இந்தியர்களுக்கு மிக வெற்றி -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications