சிகிச்சைக்காக சின்ன பிரேக் எடுத்த பிடன்.. கமலா ஹாரிஸிடம் வழங்கப்பட்ட அமெரிக்க அதிபருக்கான அதிகாரம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பிடன், உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறுகிய காலத்திற்கான அதிகாரம் ஆகும்.

அமெரிக்க அதிபர் பிடன் வாஷிங்டனில் இருக்கும் வால்டர் ரீட் மருத்துவர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த சில வருடமாகவே அவருக்கு சில உடல்நலக்கோளாறுகள் உள்ளன.

அவருக்கு வயது 79 ஆகும் நிலையில் குடல் பகுதியில் சில பாதிப்புகள் நீண்ட காலமாக உள்ளன. இதற்காக கடந்த சில வருடமாக அவர் தொடர் சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் செய்து வருகிறார்.

அதிபர்

அதிபர்

கடந்த ஜனவரியில் அதிபராக பதவி ஏற்றபின் பிடன் குடல் பரிசோதனை செய்யவில்லை. இதையடுத்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனைகளுக்காக பிடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அவர் மயக்க நிலையில் இருப்பதால் சட்டப்படி சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் சான்று அளிக்கும் வரை அவர் அதிபராக இருக்க முடியாது.

அமெரிக்க விதி

அமெரிக்க விதி

அமெரிக்க விதிகளின்படி அதிபர் பதவியை வகிக்க உடல் ரீதியாகவும் தகுதியாக இருக்க வேண்டும். சுயநினைவோடு இருக்க வேண்டும். இதனால் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை அதிபருக்கான பவர் தானாக துணை அதிபருக்கு சென்றுவிடும். அதன்படி உடல் பரிசோதனைக்காக பிடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறுகிய காலத்திற்கான அதிகாரம் ஆகும்.

மீண்டு வருவார்

மீண்டு வருவார்

பிடன் மீண்டும் வந்ததும் தானாக அவர் அதிபர் ஆகிவிடுவார். இந்த குறுகிய காலத்தில் கூட கமலா ஹாரிஸுக்கு அதிபருக்கான முழு அதிகாரமும் வழங்கப்படும். அதாவது அணு ஆயுதங்களை இயக்கும் அதிகாரம் தொடங்கி, முப்படையை கட்டுப்படுத்தும் அதிகாரம் வரை அனைத்தும் வழங்கப்படும். பிடன் வரும் வரை வெள்ளை மாளிகையில் அதிபர் இருக்கும் வெஸ்ட் விங்கில் கமலாதான் இருப்பார்.

கமலா

கமலா

கமல் ஹாரிஸ்தான் அமெரிக்காவின் முதல் துணை அதிபர். இப்போது குறைந்த நேரத்திற்கு அதிபராக அவர் பவர் பெற்றுள்ளார். ஒருவகையில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் கமலா ஹாரிஸ் என்றும் கூட இதை வைத்து அழைக்கலாம். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்

புஷ்

இதற்கு முன் 2002, 2007ல் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது துணை அதிபருக்கு சில காலம் அதிபர் அதிகாரம் வழங்கப்பட்டது. பிடன் உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால் மீண்டும் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் நிற்பது சந்தேகமே. மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்கும் விருப்பம் பிடனுக்கு இருந்தாலும் கூட அவரின் உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+