இத்தனை வருட நெருக்கமான நட்பு காலி.. பங்காளி கனடா உடனே போருக்கு போகும் அமெரிக்கா? ஏன்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: "எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நாங்கள் போரில் இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.. அமெரிக்கா முன்பு போல இல்லை.. ரொம்ப மாறிவிட்டது".. அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்புக்கு எதிராகக் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆவேசமாகப் பேசியுள்ள இந்த வார்த்தைகள், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

நீண்டகால நட்பு நாடுகளான அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் வர்த்தகப் போர் மூண்டுள்ளது.

Canada

என்ன நடந்தது? வர்த்தகப் போரின் பின்னணி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹாக்கி பேட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில் துறைப் பொருட்கள் மீது திடீரென 50 சதவீத வரியை விதித்தது. இது கனடாவின் மொத்த அமெரிக்க ஏற்றுமதியில் சுமார் 5 சதவீதத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் வரும் பால் பொருட்கள், எஃகு, வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள், மின்னணு சாதனங்கள், காகிதம் மற்றும் மரக்கூழ் உள்ளிட்ட முக்கியப் பொருட்களுக்கு செப்டம்பர் 8 முதல் அதே அளவிற்குப் பதிலடி வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முறிந்தது ஏன்?

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இரு நாட்டு அதிகாரிகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. வாஷிங்டனில் நடைபெற்ற மூன்று நாள் தீவிர பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் கடைசி நேர நிபந்தனைகள் மொத்தப் பேச்சுவார்த்தையையும் முறியடித்தன.

அமெரிக்கா தனது வரிகளைக் கணிசமாகக் குறைத்தால், அமெரிக்க எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீதான வரிகளை நீக்கவும், அமெரிக்க மதுபானங்களின் விற்பனையை மீண்டும் அனுமதிக்கவும் கனடா தயாராக இருந்தது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் முன்வைத்த இறுதி நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்ததாகக் கனடா குற்றம் சாட்டியுள்ளது.

கனடாவின் வாகன ஏற்றுமதிக்கான சலுகைகளைக் குறைப்பது, மற்ற நாடுகளுடன் சுதந்திரமாக வர்த்தக ஒப்பந்தம் செய்யும் கனடாவின் உரிமையைக் கட்டுப்படுத்துவது, கனடாவின் இறையாண்மை, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துவது போன்ற பல கெடுபிடிகளை அமெரிக்கா விதித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பழைய நட்பு இனி இல்லை!

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மார்க் கார்னி, "அமெரிக்கா மிகவும் அதிகமாகக் கேட்கிறது, ஆனால் மிகக் குறைவாகவே கொடுக்கிறது. அவர்கள் கேட்பதை நாங்கள் தர மாட்டோம்; அவர்கள் தருவதை நாங்கள் ஏற்க மாட்டோம். கனடாவின் இறையாண்மையையோ, எங்கள் முக்கியத் தொழில்களையோ விட்டுக் கொடுக்க முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும், "அமெரிக்கா மாறிவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அமெரிக்காவின் கையெழுத்து சில நேரங்களில் பென்சிலால் எழுதப்படுகிறது.. அது எப்போது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம். இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய உறவு முறைக்கு இனி திரும்ப முடியாது.. என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.

இந்த மோதல் கனடாவிற்குப் பெரும் பொருளாதார சவாலாக அமையக்கூடும். கனடாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 70 முதல் 77 சதவீதம் அமெரிக்காவிற்கு மட்டுமே செல்கிறது. நாட்டின் சேவைத் துறை ஏற்றுமதியில் பாதி அமெரிக்காவை நம்பியே உள்ளது.

கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு வர்த்தகத்தைச் சார்ந்துள்ளது. கனடாவில் உள்ள 5 வேலைவாய்ப்புகளில் ஒன்று ஏற்றுமதியுடன் தொடர்புடையது. அமெரிக்காவின் இந்த வர்த்தக போரும், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்றலாம் என்ற ட்ரம்பின் முந்தைய கருத்துகளும் இரண்டு நாட்டு உறவை மொத்தமாக முடக்கி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+