Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை! பதறியடித்து ஓடி வந்த ஈரான்! முஷ்டியை முறுக்கிய டிரம்ப்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சமீபத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொலைமுயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே 2 முறை அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்ட கொலை முயற்சியில் இருந்தும் அவர் தப்பித்தார்.

இன்னும் சொல்லப்போனால் இந்த இரண்டு கொலை முயற்சி தாக்குதல்கள்தான் அவரின் வெற்றிக்கும் ஒரு காரணம். கொலை முயற்சி தாக்குதல்களை அவர் எதிர்கொண்ட விதம்.. அதன்பின் அவர் பிரச்சாரம் செய்த விதம்.. முகம் முழுக்க ரத்தத்தோடு.. அவர் கையை உயர்த்தி காட்டியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

us presidential election 2024 kamala harris donald trump 2024

இப்படிப்பட்ட நிலையில்தான் மூன்றாவது முறையாக மீண்டும் டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஈரானை சேர்ந்த நபர் பராஜ் ஷகேரி என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதன்படி ஈரானை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் இந்த கொலைமுயற்சியை திட்டமிட்டார். அமெரிக்காவில் உள்ள ஈரானை சேர்ந்த நபர் பராஜ் ஷகேரி என்பவர் மூலம் டிரம்ப்பை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். டிரம்ப்பை தேர்தலுக்கு முன் கொலை செய்ய வேண்டும்.

கொலை செய்யவில்லை என்றால்.. தேர்தலில் எப்படியும் அவர் தோல்வி அடைவார். அதன்பின் அவரை கொன்று விடலாம் என்று ஈரானின் அந்த அதிகாரி பராஜ் ஷகேரியை வைத்து திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பராஜ் ஷகேரியை அதிர்ச்சி தரும் வாக்கு மூலங்களை அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பிடம் வழங்கி உள்ளார்.

தான் ஒரு காண்டிராக்ட் கொலைகாரர். அதன் மூலம் நான் நிறைய கொலைகளை செய்துள்ளேன். இந்த நிலையில்தான் ஈரான் ராணுவம் என்னை தொடர்பு கொண்டு அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய திட்டம் போட சொன்னது. முதல் 7 நாள் நான் முடியாது என்றேன். பிறகு திட்டங்கள் வகுக்கப்பட்டன. திட்டப்படி டிரம்ப்பை தேர்தலுக்கு முன் கொலை செய்ய வேண்டும் என்பதே முக்கியம்.

ஆனால் கொலை செய்யவில்லை என்றால்.. தேர்தலில் எப்படியும் அவர் தோல்வி அடைவார். அதன்பின் அவரை கொன்று விடலாம். அவரின் பாதுகாப்பு வெகுவாக குறையும். அதை பயன்படுத்தி கொன்றுவிடலாம் என்று நினைத்தேன் என கூறியுள்ளார்.

மறுப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான்.. டிரம்ப்பை கொலை செய்ய நாங்கள் எதுவும் திட்டம் போடவில்லை. இதை நம்ப கூடாது. எங்களுக்கும் பராஜ் ஷகேரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரான் தெரிவித்து உள்ளது. எங்கள் நாட்டு அரசை வைத்து கதைகளை கட்டுகிறார்கள். டிரம்ப்பை நாங்கள் கொலை செய்யவோ.. தாக்கவோ நினைக்கவில்லை.

நிஜத்தில் நடக்காத விஷயங்களை வைத்து எங்களை தாக்குகிறார்கள். இவர்கள் காமெடி செய்வதற்காக எங்கள் நாட்டின் பெயரை பயன்படுத்த கூடாது. அமெரிக்க மக்கள் டிரம்பை தேர்வு செய்துள்ளனர். அவரை அதிபராக தேர்வு செய்துள்ளனர். அவர்களின் முடிவை மதிக்கிறோம். வரவேற்கிறோம். ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் தயார்.

மற்றபடி இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் எங்களை உள்ளே இழுக்க வேண்டாம். நாங்கள் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பாக போக.. பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருக்கிறோம், என்று ஈரான் அரசு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+