எங்களுக்கு முன்பே தெரியும்! புடின் தப்பு கணக்கு போட்டுட்டாரே.. பிடன் பரபர பேச்சு.. ரஷ்யாவிற்கு அடி!
நியூயார்க்: அமெரிக்க வான் எல்லையில் ரஷ்யா விமானங்கள் பறக்க தடை விதித்து அமெரிக்க அதிபர் பிடன் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் அடைந்துள்ளது. உக்ரைன் ஐரோப்பா யூனியனில் இணைய ஆர்வம் காட்டியதாலும், நேட்டோ படையில் இணைய விருப்பம் தெரிவித்ததாலும் ரஷ்யா இந்த போரை தொடுத்துள்ளது. கடந்த 6 நாட்களாக போர் நடந்து வருகிறது.
உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா கொடூர தாக்குதலை நிகழ்த்தியது. இந்த நிலையில்தான் தற்போது தலைநகர் கீவை பிடிக்க ரஷ்யா போராடி வருகிறது.

பிடன்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் உக்ரைன் போர் பற்றி அளித்த பேட்டியில், புடின் சில விஷயங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். அவர் இப்படி போர் தொடுத்தால் அதற்கு என்ன எதிர்வினை இருக்கும் என்பதை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். மேற்கு உலக நாடுகள் ரஷ்யா மீது தற்போது விதிக்கும் தடைகளை பார்த்து அவர் மிரட்சியில் இருக்கிறார். புடின் இந்த போரை திட்டமிட்டு நடத்தி வருகிறார். தேவையில்லாத போர் இது.

அமெரிக்கா ரஷ்யா
ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தைகளை புடின் தவிர்த்துவிட்டார். மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் அவருக்கு பதில் அளிக்காது என்று அவர் நினைத்துக்கொண்டு இருந்தார். நம்மை பிரித்து, நமக்குள் மோதலை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைத்தார். அவர் தவறு செய்துவிட்டார். அவரின் போருக்கு எதிராக நாங்கள் தயாராகவே இருந்தோம்.

ரஷ்யா தவறு
அவர் எப்போது போர் நடத்த போகிறார் என்பதை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தோம், வரலாறு முழுக்கவே இதை பற்றிய பாடத்தை நாங்கள் படித்து இருக்கிறோம். ஒரு சர்வாதிகாரி தங்களின் போருக்கான விலையை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மேலும் மேலும் போர்களை புரிவார். அது பெரிய ஆபத்தில் முடியும். இதனால் அமெரிக்காவிற்குதான் சிக்கல்.

புடின் தவறு
ரஷ்யா பேச்சுவார்த்தைகளை மதிக்கவில்லை. ரஷ்யா சர்வதேச எல்லையை மதிக்கவில்லை. அதனால் தற்போது ரஷ்யா மேற்கு உலக நாடுகளின் நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளது. ரஷ்ய விமானங்கள் இனி அமெரிக்க வான் எல்லையில் பறக்க முடியாது. ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான் எல்லையில் பறக்க இன்றுடன் தடை விதிக்கப்படுகிறது என்று பிடன் தனது பேச்சில் குறிப்பிட்டார். ரஷ்யா சர்வதேச அளவில் பல்வேறு விதமான தடைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications