நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க! ட்விட்டரில் எலான் மஸ்க் செய்ய போகும் டாப் மாற்றங்கள்! இனி ஆட முடியாது

Google Oneindia Tamil News

நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் அதில் பல அதிரடி மாற்றங்கள் வர போவதாக தகவல்கள் வருகின்றன. இதில் வர போகும் மாற்றங்களை எலான் மஸ்க் பல முறை நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Recommended Video

    Elon Musk Buys Twitter Officially For 44 Billion Dollar

    ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் - எலான் மஸ்க் இடையே நடந்த ஆலோசனையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.டிவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்கையும், தலா ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலைக்கு வாங்கி உள்ளார் எலான் மஸ்க்.

    இந்த நிலையில்தான் டெக் உலகில் பட்டியலிடப்பட்டு வரும் புதிய ட்விட்டர் மாற்றங்கள் மூச்சு வாங்க வைக்கும் அளவிற்கு உள்ளது. அது என்னென்ன வாங்க பார்க்கலாம்!

     ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க்! பராக் அக்ரவால் வெளியே? புதிய சிஇஓ அவரா.. அடுத்து என்ன ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க்! பராக் அக்ரவால் வெளியே? புதிய சிஇஓ அவரா.. அடுத்து என்ன

    ட்விட்டர் மாற்றம்

    ட்விட்டர் மாற்றம்

    கண்டிப்பாக ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துரிமை அதிகரிக்கும். தற்போது வரை அமெரிக்காவில் வலதுசாரிகள் ட்விட்டரில் பெரிதாக சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடிவது இல்லை. காமெடிகள் கூட சர்ச்சை ஆகும் என்ற காரணத்தால் கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. பல நாடுகளில் அரசுகளின் கோரிக்கையால் மக்கள் சுதந்திரமாக எதுவும் பேச முடிவது இல்லை. ட்விட்டரில் கருத்துரிமை அதிகம் இருக்க வேண்டும் என்று மஸ்க் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். அதனால் கண்டிப்பாக இந்த மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    கணக்கு நீக்கம்

    கணக்கு நீக்கம்

    அதாவது ஏதாவது ஒரு போஸ்டல் கணக்கு நீக்கப்படுவது. அல்லது அரசின் கோரிக்கையால் போஸ்ட் நீக்கப்படுவது போன்றவை வெகுவாக தடுக்கப்படும். அதே சமயம் சட்ட விதிகளை மீறும் போஸ்ட் அனுமதிக்கப்படாது என்று கூறுகிறார்கள். ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய காரணத்தால் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட டிரம்ப் போன்ற அமெரிக்க வலதுசாரி தலைவர்கள், மற்ற நாடுகளின் இடதுசாரி தலைவர்கள் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

    ஓபன் சோர்ஸ் - மாற்றம்

    ஓபன் சோர்ஸ் - மாற்றம்

    அதேபோல் ட்விட்டரின் கோடிங் gethub பக்கத்தில் வெளிப்படையாக போடப்படும். இதன் மூலம் அந்த கோடிங்கில் தவறு இருக்கிறதா.. என்ன மாற்றலாம் என்று மக்கள் சொல்ல முடியும். அதேபோல் இந்த கோடிங் மூலம் மற்றவர்களின் ட்விட் உங்களுக்கு அதிகம் புரொமோஷன் செய்யப்படுகிறதா, மற்றவர்களின் கணக்குகள், அல்லது கொள்கைகள் அதிகம் டிரெண்ட் கண்டுபிடிக்க முடியும். ட்விட்டரின் வெளிப்படைத்தன்மை இதனால் கண்டிப்பாக அதிகரிக்கும்.

    ட்விட்டர் எடிட்

    ட்விட்டர் எடிட்

    ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டு வர வேண்டும் என்றும் மஸ்க் முயன்று வருகிறார். ஆனால் இதன் மூலம் நீங்கள் எடிட் செய்யும் போஸ்டுகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். உதாரணமாக நீங்கள் எடிட் செய்த போஸ்டிங் ரீ டிவிட் எண்ணிக்கை ஜீரோவாக மாற்றி அமைக்கப்படும். அதேபோல் எடிட் ஹிஸ்டரி இருக்கும். இதனால் இன்று ஒன்று சொல்லிவிட்டு அதை நாளை மாற்ற முடியாது. அதேபோல் எடிட் செய்ய கால அவகாசம் கொடுக்கப்படும்.

    பாட்ஸ்

    பாட்ஸ்

    இது போக மஸ்க் பல நாட்களாக எச்சரித்து வரும் பாட்ஸ் நீக்கம் விரைவில் நடக்கலாம். அதாவது பொய்யான கணக்குகள் இருப்பதை ட்விட்டர் இனி நீக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் பொய்யான டிரெண்டுகள், அரசியல் கட்சிக்கு ஆதரவான பொய்யான டிரெண்ட்கள் குறையும். பல நாடுகளில் ட்விட்டரை நம்பி அரசியல் கருத்துக்களை பரப்பும் கட்சிகள், சினிமா நடிகர்களின் பொய்யான bots கணக்குகள் முடக்கப்படும். இதனால் அரசியல் கட்சிகள் பொய்யான டிரெண்டுகளை செய்து இனி ஆட முடியாது.

    கிரிப்டோகரன்சி மோசடி

    கிரிப்டோகரன்சி மோசடி

    இதன் காரணமாக இன்னொரு பக்கம் பொய்யான கிரிப்டோகரன்சி மோசடிகளும் தடுக்கப்படும். ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோகரன்சி மோசடிகள் அதிகம் ஆகியுள்ளது. அதோடு எலான் மஸ்க் கணக்கு தொடங்கி பலரின் கணக்குகள் இது தொடர்பான பிரச்சாரத்திற்காக ஹேக் செய்யப்பட்டது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ட்விட்டரில் நிறைய மாற்றங்கள் வரும்.

    நிர்வாகிகள் மாற்றம்

    நிர்வாகிகள் மாற்றம்

    இது இல்லாமல் விளம்பரம் இல்லாமல் ட்விட்டர் சேவையை பயன்படுத்த ட்விட்டர் புதிதாக சாப்ஸ்க்ரிப்ஷன் மாடலை கொண்டு வரும். மேலும் ஒரு ட்விட் கூட போடாமல் போர்ட் மெம்பர் குழுவில் இருக்கும் நபர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. புதிது போர்ட் உருவாக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், டவுன் வோட் என்ற வசதி கொண்டு வரப்படலாம். சிஇஓ பராக் அகர்வால் நீக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் போக ட்விட்டர் லோகோ மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

    English summary
    What are changes expected to happen in Twitter under Elon Musk ownership? ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X