அதென்ன நீல.. சிவப்பு ஸ்டேட்ஸ்? அமெரிக்க தேர்தலில் ஏன் ஸ்விங் ஸ்டேட்ஸ் முக்கியம்? நோட் பண்ணுங்க
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில்.. மக்கள் வாக்களிக்கும் விதத்தை பொறுத்து மாகாணங்கள் வண்ணங்களாக பிரிக்கப்படும். அங்கே உள்ள மாகாணங்கள் "சிவப்பு மாநிலம்" மற்றும் "நீல மாநிலம்" என்ற பிரிக்கப்பட்டு உள்ளன.
அதாவது அதன் வாக்காளர்கள் எந்த கட்சிக்கு முக்கியமாக வாக்களிக்கிறார்கள் என்பதை பொறுத்து தேர்தல் டிரெண்ட் அங்கே நிர்ணயம் செய்யப்படும். சிவப்பு மாநிலங்களில் குடியரசுக் கட்சி மற்றும் நீல மாநிலங்களில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தருவார்கள் என்பது அர்த்தம். இதற்கு நேர்மாறாக, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே வாக்குகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் மாநிலங்கள் "ஸ்விங் ஸ்டேட்ஸ்" அல்லது "ஊதா மாநிலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

1980 முதல் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்ற மாநிலங்கள் சிவப்பு மாநிலங்கள், அதே சமயம் 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் நீல மாநிலங்கள். இந்த மாநிலங்கள் பொதுவாக அவர்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கணிக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.
ஸ்விங் மாநிலங்களில், குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான கடுமையான போட்டி நிலவும் மாநிலங்கள். இங்கே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள்.
சிவப்பு மாநிலங்கள் (குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணம்): அதன்படி டெக்சாஸ், அலபாமா, டென்னசி, கன்சாஸ், சவுத் கரோலினா மற்றும் இந்தியானா ஆகியவை குடியரசுக் கட்சிக்கு ஆதரவான பாரம்பரியமான மாநிலம் ஆகும். சமீபத்தில் நடத்த செனட் உள்ளிட்ட தேர்தல்களிலும் இதே டிரெண்ட்தான் அங்கே உள்ளது.
நீல மாநிலங்கள் (ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணம்): மேற்குக் கடற்கரை, வடகிழக்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் உள்ள பல மாநிலங்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள். கலிபோர்னியா, நியூயார்க், இல்லினாய்ஸ், ஓரிகான் மற்றும் வாஷிங்டன் ஆகியவை இதில் அடங்கும்.
ஸ்விங் ஸ்டேட்ஸ் : அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள் ஆகும்.
ஸ்விங் ஸ்டேட்ஸ் முக்கியம்: இப்படிப்பட்ட நேரத்தில் ஸ்விங் ஸ்டேட்ஸ்தான் மிக முக்கியம். அதன்படி தற்போது ஸ்விங் ஸ்டேட்ஸ் என்று கருதப்படும் 7 ஸ்விங் ஸ்டேட்ஸ்களில் ட்ரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார். AtlasIntel's வெளியிட்ட கணிப்பில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 7 மாகாணங்களில் நடத்தப்பட்ட கணிப்பில்.. பதிலளித்தவர்களில் சுமார் 49% பேர் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிப்போம் என்று கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை விட டிரம்ப் 1.8% வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் 2500 பேருக்கும் அதிகமானோரிடம் இந்த கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிப்பதாக கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அரிசோனாவில், டிரம்ப் 51.9% வாக்குகளை பெறுவார். கமலா ஹாரிஸ் 45.1% வரை வாக்குகளை பெறுவார்.
நெவாடாவில், அதிபர் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கேட்டபோது, 51.4% வாக்காளர்கள் டிரம்பைத் தேர்ந்தெடுத்தனர், 45.9% பேர் ஹாரிஸைத் தேர்ந்தெடுத்தனர்.
வட கரோலினாவில், டிரம்ப் 50.4% வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் ஹாரிஸ் 46.8% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
-
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications