அமெரிக்க அதிபர் தேர்தல்.. அதென்ன ஸ்விங் ஸ்டேட்ஸ்? சிவப்பு, நீல ஸ்டேட்ஸ்? எலக்ட்ரல் வாக்கு? விளக்கம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்படும் ஸ்விங் ஸ்டேட்ஸ், சிவப்பு, நீல ஸ்டேட்ஸ் என்றால் என்ன.. எலக்ட்ரல் வாக்கு முறை என்றால் என்ன என்று.. பலதரப்பட்ட கேள்விகளுக்கு எளிமையான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்று எளிமையாக இங்கே புரிந்து கொள்ள முடியும்.
நீல - சிவப்பு ஸ்டேட்டஸ் என்றால் என்ன?: அமெரிக்க அதிபர் தேர்தலில்.. மக்கள் வாக்களிக்கும் விதத்தை பொறுத்து மாகாணங்கள் வண்ணங்களாக பிரிக்கப்படும். அங்கே உள்ள மாகாணங்கள் "சிவப்பு மாநிலம்" மற்றும் "நீல மாநிலம்" என்ற பிரிக்கப்பட்டு உள்ளன.

அதாவது அதன் வாக்காளர்கள் எந்த கட்சிக்கு முக்கியமாக வாக்களிக்கிறார்கள் என்பதை பொறுத்து தேர்தல் டிரெண்ட் அங்கே நிர்ணயம் செய்யப்படும். சிவப்பு மாநிலங்களில் குடியரசுக் கட்சி மற்றும் நீல மாநிலங்களில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தருவார்கள் என்பது அர்த்தம். இதற்கு நேர்மாறாக, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே வாக்குகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் மாநிலங்கள் "ஸ்விங் ஸ்டேட்ஸ்" அல்லது "ஊதா மாநிலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
மாகாணங்கள் எப்படி பிரிக்கப்படுகிறது?: 1980 முதல் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்ற மாநிலங்கள் சிவப்பு மாநிலங்கள், அதே சமயம் 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் நீல மாநிலங்கள். இந்த மாநிலங்கள் பொதுவாக அவர்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கணிக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.
சிவப்பு மாநிலங்கள் (குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணம்): அதன்படி டெக்சாஸ், அலபாமா, டென்னசி, கன்சாஸ், சவுத் கரோலினா மற்றும் இந்தியானா ஆகியவை குடியரசுக் கட்சிக்கு ஆதரவான பாரம்பரியமான மாநிலம் ஆகும். சமீபத்தில் நடத்த செனட் உள்ளிட்ட தேர்தல்களிலும் இதே டிரெண்ட்தான் அங்கே உள்ளது.
நீல மாநிலங்கள் (ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணம்): மேற்குக் கடற்கரை, வடகிழக்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் உள்ள பல மாநிலங்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள். கலிபோர்னியா, நியூயார்க், இல்லினாய்ஸ், ஓரிகான் மற்றும் வாஷிங்டன் ஆகியவை இதில் அடங்கும்.
ஸ்விங் மாகாணம் என்றால் என்ன?: ஸ்விங் மாநிலங்களில், குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான கடுமையான போட்டி நிலவும் மாநிலங்கள். இங்கே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள்.
ஸ்விங் ஸ்டேட்ஸ் : அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள் ஆகும்.
ஸ்விங் ஸ்டேட்டஸ் ஏன் முக்கியம்: ஸ்விங் ஸ்டேட்டஸ்தான் மிக முக்கியம். அதன்படி தற்போது ஸ்விங் ஸ்டேட்டஸ் என்று கருதப்படும் 7 ஸ்விங் ஸ்டேட்டஸ்களில் ட்ரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார். AtlasIntel's வெளியிட்ட கணிப்பில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 7 மாகாணங்களில் நடத்தப்பட்ட கணிப்பில்.. பதிலளித்தவர்களில் சுமார் 49% பேர் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிப்போம் என்று கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை விட டிரம்ப் 1.8% வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் 2500 பேருக்கும் அதிகமானோரிடம் இந்த கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிப்பதாக கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அரிசோனாவில், டிரம்ப் 51.9% வாக்குகளை பெறுவார். கமலா ஹாரிஸ் 45.1% வரை வாக்குகளை பெறுவார்.
நெவாடாவில், அதிபர் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கேட்டபோது, 51.4% வாக்காளர்கள் டிரம்பைத் தேர்ந்தெடுத்தனர், 45.9% பேர் ஹாரிஸைத் தேர்ந்தெடுத்தனர்.
வட கரோலினாவில், டிரம்ப் 50.4% வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் ஹாரிஸ் 46.8% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எலக்ட்ரல் வாக்குகள் என்றால் என்ன?: அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திற்கு சம பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. கறுப்பின மக்கள்.. அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடாது என்பதற்காக இந்த எலக்ட்ரல் வாக்கு முறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.
மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும். உதாரணமாக ஒரு மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களுக்கே.. மொத்தமாக அந்த மாகாணத்தின் எல்லா எலக்ட்ரல் வாக்குகளும் வழங்கப்படும். உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் யாருக்கும் அதிகமான மக்கள் வாக்கு கிடைக்கிறதோ.. அவர்களுக்கே அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அப்படியே வழங்கப்படும். அதாவது ஒரு மாகாணத்தில் மெஜாரிட்டி வாக்குகளை பெறும் வேட்பாளர் அந்த மாகாணத்தின் மொத்த எலக்ட்ரல் வாக்குகளையும் பெறுவார். இதன் காரணமாக தேசிய அளவில் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் கூட.. வெற்றிபெற முடியும். அதாவது மெஜாரிட்டி மாகாணங்களில் எலக்ட்ரல் வாக்குகளை அள்ளினால் போதும்.. 270 எலக்ட்ரல் வாக்குகளில் அள்ளினால் போதும் தேர்தலில் வெற்றிபெற முடியும்.
எப்படி தீர்மானிக்கப்படும்?: உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 55 எலக்டர்ஸ் உள்ளனர். அதிக எலக்ட்ரல் வாக்காளர்கள் உள்ள மாகாணங்களில் இதுவும் ஒன்று. இங்கே எலக்டர்ஸ் வாக்கு யாருக்கு செல்கிறதோ.. அவர்களுக்கு தேர்தலில் சாதகமான சூழல் ஏற்படும். பொதுவாக கலிபோரியாவில் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். உதாரணமாக கடந்த 5 தேர்தலில் 2ல் வெற்றிபெற்ற அதிபர்கள் மொத்தமாக மக்கள் வாக்குகளை கணக்கில் கொண்டால்.. குறைந்த மக்கள் வாக்குகளை பெற்று.. ஆனால் அதிக எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற்றவர்கள். 2016ல் டிரம்பிற்கு ஹிலாரியை விட 3 மில்லியன் மக்கள் வாக்கு குறைவாக இருந்தது.. ஆனாலும் எலக்ட்ரல் வாக்கு அதிகமாக இருந்ததால் டிரம்ப் வெற்றிபெற்றார்.












Click it and Unblock the Notifications