டிரம்ப் வந்ததும்.. சோலி முடிஞ்சது.. அமெரிக்காவில் பதறும் இந்தியர்கள்.. எச்.ஆர்களிடம் கெஞ்சல்.. ஏன்?
நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் பலரும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி காரணமாக அச்சத்தில் உள்ளார்களாம். அரசியல் ரீதியாக அமெரிக்காவில் குடிமகன் என்ற உரிமை பெற்ற இந்தியர்கள் பலரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்கள்தான்.
ஆனால் இன்னும் அங்கே குடியுரிமை பெறாத இந்தியர்கள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி காரணமாக அச்சத்தில் உள்ளனர். டிரம்ப் என்ன மாதிரியான விதி முறைகளை கொண்டு வருவார்.. விசாவில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பின்வரும் அம்சங்கள் இந்தியர்களிடையே நிலவி வருகிறதாம்.

அச்சம் 1: அமெரிக்காவில் விசா விதிகள் மாற்றப்பட்டால் புதிதாக அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
அச்சம் 2: குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்தியர்கள் பலர் முறைகேடாக அமெரிக்கா சென்றுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட.. வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன.
அச்சம் 3: முக்கியமாக அதிபர் டிரம்ப் "ஸ்கில்" அடிப்படையில் விசா வழங்கும் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது. இதனால் குறைந்த ஸ்கில் பணிகளை செய்ய அமெரிக்கா சென்ற இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அச்சம் 4: அதேபோல் அங்கே படிக்க சென்று.. அப்படியே வேலையில் சேர்ந்தவர்கள் தங்கள் நிறுவன எச். ஆர்களிடம் கதற தொடங்கி உள்ளனராம். அதன்படி எங்களுக்கு விசா உள்ளிட்ட விவகாரங்களில் நிறுவனங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனராம்.
அச்சம் 5: டிரம்ப் வந்ததும் கிரீன் கார்டு விதிகளை மொத்தமாக மாற்றலாம். அப்படி நடந்தால்.. எங்களுக்கு அது பிரச்சனையாக முடியும். முக்கியமாக ஏற்கனவே லைனில் நிற்பவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்காமல் போகும் அச்சம் எழுந்துள்ளது.
குடியுரிமை: அதோடு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
விடுமுறைக்கு ஊர் திரும்பாமல் இருப்பவர்கள்: அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலர்.. இந்த வருட இறுதியில் வர உள்ள கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளின் விடுமுறைக்கு ஊர் திரும்பாமல் அங்கேயே தங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்பார். அவர் ஆட்சிக்கு வந்த முதல் வாரமே அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர் மீது ஆக்சன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா திரும்பினால்.. மீண்டும் அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்படுமா? என்ற அச்சம் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இடையே நிலவுகிறது.
இந்த அச்சம் காரணமாக டிரம்ப் பதவி ஏற்று விதிகளை மாற்றும் வரை அமெரிக்காவை விட்டே செல்ல வேண்டும். அமெரிக்காவிலேயே இருக்கலாம். இந்தியா வந்தால் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்வதில் சிக்கல் ஆகும் என்ற அச்சத்தில் அவர்கள் அமெரிக்காவிலேயே இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் பிளானிங்: ஏற்கனவே டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வரும் முதல் நாளே.. அதாவது ஜனவரி 20ம் தேதியே அமலுக்கு வரும் என்கிறார்கள்.
இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது இவர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications