டிரம்ப் சுடப்பட்ட போது என்ன நடந்தது? சுற்றி அரணாக நின்ற சீக்ரெட் சர்வீஸ்.. பரபரப்பு வீடியோ காட்சிகள்
நியூயார்க்: அமெரிக்க வேட்பாளர் அதிபர் டிரம்ப் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சிறிய ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. டிரம்ப் காதுகளில் மட்டும் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. மற்றபடி அவருக்கு வேறு பாதிப்புகள் இல்லை.
அந்த ரத்த காயத்தோடு டிரம்ப் மக்கள் முன்னிலையில் ஜே போடுவது போல துணிச்சலாக சவால் விடுவது போல கைகளை உயர்த்தி காட்டியது கவனம் பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளார்.

ஏற்கனவே அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இந்த துப்பாக்கி சூடு அவருக்கான ஆதரவை அதிகரிக்கலாம். அதிபர் தேர்தலில் விவாதங்கள், மக்கள் கருத்து கணிப்புகள் எல்லாம் நடக்கும். அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒரு கட்டமாக அதிபர் பிடன், முன்னாள் அதிபர் ட்ரம்ப் இடையே சமீபத்தில் விவாதம் நடந்தது. இதில் டிரம்ப் வென்றது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சூடு: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த ரத்த காயத்தோடு டிரம்ப் மக்கள் முன்னிலையில் ஜே போடுவது போல துணிச்சலாக சவால் விடுவது போல கைகளை உயர்த்தி காட்டியது கவனம் பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளார்.
பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரச்சாரம் செய்யும் போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர் பிடன் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. டிரம்ப் காயமடைந்த நிலையில் சந்தேகத்திற்குரிய 2 பேர் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்
துப்பாக்கி சூட்டிற்கு பின் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டினார். அவரின் காதுகளில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது. டிரம்ப்பை சுட்டதாக நம்பப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
டிரம்ப் அறிக்கை: இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு விரைவான பதிலடி கொடுத்த யுனைடெட் ஸ்டேட்ஸ் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் அனைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிக முக்கியமாக, பேரணியில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்திற்கும், மோசமாக காயமடைந்த மற்றொரு நபரின் குடும்பத்திற்கும் எனது இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
I fully endorse President Trump and hope for his rapid recovery pic.twitter.com/ZdxkF63EqF
— Elon Musk (@elonmusk) July 13, 2024
இது போன்ற செயல் நம் நாட்டில் நடப்பது நம்பமுடியாதது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை, அவர் இப்போது இறந்துவிட்டார். என் வலது காதின் மேல் பகுதியில் துளையிட்ட தோட்டாவால் நான் சுடப்பட்டேன். ஏதோ தவறு இருப்பதாக நான் உடனடியாக அறிந்தேன், நான் பேசும் போது சட்டென கேட்ட ஒரு சத்தம் என் கவனத்தை ஈர்த்தது. கவனித்து பார்த்தால் என் காதுகளில் சுடப்பட்டு இருந்தது.
உடனடியாக தோட்டா தோலைக் கிழித்ததை உணர்ந்தேன். அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது, அதனால் என்ன நடக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் இந்த அமெரிக்காவை என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications