நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓரம் கட்டுவோம்.. பிடன் வார்னிங்! வேடிக்கை பார்க்க மாட்டோம்.. ஜின்பிங் பதிலடி! அமெரிக்கா சீனா மோதல்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: நேற்று அமெரிக்க அதிபர் பிடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நடத்திய வீடியோ கால் உரையாடலில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் சீனாவின் உதவியை ரஷ்யா எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. சீனாவிடம் இருந்து ஆயுத உதவிகளை பெற்று உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முயன்று வருகிறது. ஆனால் ரஷ்யாவிற்கு சீனா உதவ நேரடியாக முன் வரவில்லை.

இருப்பினும் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை சீனா எடுத்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று அமெரிக்க அதிபர் பிடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வீடியோ கால் மூலம் இரண்டு மணி நேரம் உரையாடினார்கள். மிகவும் சீரியஸாக இதில் வாதங்கள் வைக்கப்பட்டன.

சூடான சுவையான “ஜெலன்ஸ்கி டீ” அசாமில் அசத்தல் அறிமுகம்.. உக்ரைன் அதிபர் போல் ஸ்ட்ராங்கா இருக்குமாம் சூடான சுவையான “ஜெலன்ஸ்கி டீ” அசாமில் அசத்தல் அறிமுகம்.. உக்ரைன் அதிபர் போல் ஸ்ட்ராங்கா இருக்குமாம்

சீனாவிற்கு மிரட்டல்

சீனாவிற்கு மிரட்டல்

இந்த மீட்டிங்கில் அமெரிக்க அதிபர் பிடன், சீனாவிற்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி சீனா ரஷ்யாவிற்கு உதவி செய்ய முயற்சிக்க கூடாது. அப்படி செய்தால் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். சீனா ராணுவ ரீதியான உதவிகளை செய்தால் அந்த நாடு மீது பொருளாதார ரீதியாக தடைகளை விதிப்போம். அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகள் சீனாவை ஓரம் கட்டும் என்று அமெரிக்க அதிபர் இந்த மீட்டிங்கில் எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நேட்டோ பேச வேண்டும்

நேட்டோ பேச வேண்டும்

அதே சமயம் சீன தரப்பு இதில் வேறு மாதிரியான கருத்துக்களை தெரிவித்துள்ளது. இந்த மீட்டிங்கில் சீன அதிபர் ஜின்பிங் பேசியதாக, சீன அரசு சார்பாக அந்நாட்டு குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா , ஐரோப்பா, நேட்டோ நாடுகள் இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் பேச வேண்டும், பேச்சுவார்த்தை மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். ரஷ்யாவை முடக்கும் வகையில் நீங்கள் போடும் எந்த விதமான பொருளாதார தடைகளும் போரை நிறுத்த உதவாது என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.

தடைகள் உதவாது

தடைகள் உதவாது

மேலும், பொருளாதார தடைகள் போரை நிறுத்த உதவாது. அதோடு உக்ரைன் போரில் சீனாவின் நிலைப்பாட்டை வைத்து சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா நினைக்க கூடாது. அப்படி நினைத்தால் அதை சீனா வெறுமனே அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. நாங்கள் ரஷ்யாவிற்கு ராணுவ உதவிகளை வழங்க போவதாக பொய்யான தகவல்களை அமெரிக்கர்கள் வெளியிடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜி ஜின்பிங் மீட்டிங்கில் குறிப்பிட்டார்.

தைவானோடு பேசுவது தவறு

தைவானோடு பேசுவது தவறு

மேலும் தைவானோடு அமெரிக்கா நெருங்கிய உறவு மேற்கொள்வதை ஏற்க முடியாது. தைவானை தனி நாடாக கருதி அதோடு அமெரிக்கா பேசி வருவதை ஏற்க முடியாது. இது சீனாவின் உறவுக்கு முரணானது. அமெரிக்க அதிகாரிகளை தைவானுக்கு அனுப்புவதை ஏற்க மாட்டோம். உக்ரைனை எப்படி அமெரிக்கா தனது கைப்பாவையாக நடத்தியது அதேபோல் தைவானை நடத்த அமெரிக்கா நினைக்கிறது. அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

சீனாவை போருக்குள்

சீனாவை போருக்குள்

ரஷ்யாவின் பாதுகாப்பை பற்றி மேற்கு உலகம் பேசவில்லை. ரஷ்யாவிற்கு சீனா உதவி செய்ய போவதாக கூறி, சீனாவை இந்த போருக்குள் இழுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அது நடக்காது. இந்த போர் காரணமாக சீனா எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். அனுமதிக்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த இரண்டு மணி நேர மீட்டிங்கில் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
What has really happened between the Chinese and the USA president video call yesterday?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X