இந்தியா, அமெரிக்காவில்.. வேலையை விட்டு செல்லும் 60000 பேருக்கும் மைக்ரோசாப்ட் வழங்கும் சலுகை என்ன?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம், செலவுகளைக் குறைத்துக்கொண்டு ஏஐயில் பெருமளவு முதலீடு செய்யும் நோக்கில், தனது பணியாளர்களில் ஏறக்குறைய கால் பங்கான 60,000 ஊழியர்களுக்குத் தாமாக முன்வந்து வேலையை விட்டு விலகும் வாய்ப்பை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரிட்டனில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களில் துணைத் தலைவர் மற்றும் அதற்குக் கீழுள்ள பதவிகளில் உள்ள ஊழியர்கள் தகுதி பெறுவார்கள் என்றும், அதே சமயம் தரவு மையங்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் பணிபுரியும் சில ஊழியர்கள் உட்பட சில குழுக்களுக்கு இந்த வாய்ப்பு விலக்களிக்கப்பட்டுள்ளது என்றும் மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Microsoft ai it jobs

ஐடி ஊழியர்களின் வாழ்வில் ஏஐ தொழில்நுட்பம் புயலை வீசும் என்று ஏற்கனவே பலர் கணித்து இருந்தார்கள். வரன் கொடுத்தவர்கள் தலைலேயே வைப்பது போல், ஏஐயை உருவாக்கிய ஐடி ஊழியர்களுக்கு இன்று பெரிய அளவில் வேலை பறிபோகிக்கொண்டிருக்கிறது. திரும்ப திரும்ப செய்யக்கூடிய வேலைகளுக்கு இனி மனிதன் தேவையில்லை.. மெஷின் மற்றும் ஏஐ போதும் என்ற கொள்கை தான் இதற்கு காரணம். கோடிங் எழுதும் வேலைகளை கூட ஏஐ செய்ய தொடங்கி உள்ளது. ஏஐயால் செய்ய முடியாத வேலைகளுக்கு தான் இனி டிமாண்ட் அதிகம் ஆகும். அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து வேலை செய்யக்கூடியவர்களுக்கும் பணி வாய்ப்பு அதிகமாகி வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் வேலையை விட்டு ஊழியர்களை தூக்கி வருகின்றன.

அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா முழுவதும் உள்ள சுமார் 60,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்க போகிறது. ஆனால் சற்றே டீசன்டான மொழியில் விஆர்எஸ் என்ற பெயரில் இந்த ஆண்டு இறுதியுடன் வீட்டுக்கு அனுப்ப போகிறது. இது இந்த ஆண்டின் அதன் இரண்டாவது விஆர்எஸ் திட்டம் ஆகும். மேலும் இது முதலாவதை விஆர்எஸ் திட்டத்தை விட மிகவும் பெரியது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீப் ஸ்டாப் ஆபிஷர் ஏமி கோல்மேன் நேற்று மெயில் அனுப்பி உள்ளார. அதில், விஆர்எஸ் சலுகை (VEO), நிறுவனத்தின் சுமார் 223,000 ஊழியர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோருக்கானது. இது மைக்ரோசாப்டின் 100ல் 70 வேலைகளை செய்வோர் வரை பாதிக்க போகிறது. பொது மேலாளர்கள் மற்றும் துணைத் தலைவர் பதவிகளைக் கொண்டவர்ளுக்குமே விஆர்எஸ் தந்து வீட்டுக்கு அனுப்ப போகிறது மைக்ரோசாப்ட். ஆனால் அந்நிறுவனத்தின் துணைத் தலைவர்களுக்கு மட்டும் இந்த விஆர்எஸ் கிடையாது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நடத்திய ஓய்வூதியப் பணி விலகல் சலுகையைப் போல் கிடையாது. இதில் வயது அல்லது பணி அனுபவ வரம்பு எதுவும் இல்லை, மேலும் விஆர்எஸ் திட்டத்திற்கு தகுதி பெறுவதில் செயல்திறனுக்கு எந்தப் பங்கும் இல்லை. தகுதியுள்ள ஊழியர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்களின் தனிப்பட்ட விதிமுறைகளுடன் ஒரு மெயிலைப் பெறுவார்கள். அவர்கள் டிசம்பர் முதல் வாரம் வரை முடிவெடுக்க அவகாசம் உள்ளது, மேலும் ஏற்றுக்கொள்பவர்கள் ஆண்டின் இறுதியில் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள்.

நிறுவனத்திற்கு வெளியே ஒரு எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு, இந்த சலுகை ஆதரவுடன் அந்த மாற்றத்தை இப்போதே மேற்கொள்வதற்கான ஒரு புதிய வாய்ப்பை வழங்க உள்ளது . மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் பணியாளர்களை மாற்றியமைக்க மற்றொரு வழியையும்" வழங்குகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீப் ஸ்டாப் ஆபிஷர் ஏமி கோல்மேன் கூறினார். மைக்ரோசாஃப்டின் விருப்ப ஓய்வுத் திட்டம் அதன் வழக்கமான பணிநீக்க இழப்பீட்டைப் போலவே வழங்கப்படுகிறது.


வேலையை விட்டு செல்வோருக்கு மைக்ரோசாப்ட் வழங்கும் புதிய சலுகை என்ன?

வேலையை விட்டு செல்லும் ஊழியரின் பணிக்காலம் மற்றும் அவர் வகிக்கும் பதவியின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கான அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும்.

வேலையை விட்டு செல்லும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிறுவனப் பங்குகள் தொடர்பாக, குறிப்பிட்ட காலத்திற்கு அவை அவர்களுக்குச் சொந்தமாகும் நடைமுறை தொடரும்.

வேலையை விட்டு செல்லும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கான மருத்துவக் காப்பீட்டுச் சலுகை தொடரும்.

விஆர்எஸ் பெறுவோருக்கு வேறு நிறுவனங்களில் வேலை தேடுவதற்கான வழிகாட்டுதல் உள்ளிட்ட தொழில் மாற்ற உதவிகள் கிடைக்கும்.

முன்பு மைக்ரோசாப்ட் வழங்கிய விருப்ப ஓய்வுத் திட்டத்தில், நீண்டகாலம் பணியாற்றியவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் இருந்தன. புதிய திட்டத்தில் அந்த நீட்டிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுச் சலுகை கிடையாது.

எவ்வளவு பணம் கிடைக்கும்?

அமெரிக்காவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஆட்குறைப்பின்போது வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு இணையான தொகையே இந்தத் திட்டத்திலும் வழங்கப்பட உள்ளது.

கடந்த முறை ஆட்குறைப்பின்போது குறைந்தபட்சமாக 60 நாட்களுக்கான அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட்டது.
வேலைவிட்டு சென்ற பெரும்பாலான மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 39 வாரங்கள் வரையிலான அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட்டது.
64-வது நிலை மற்றும் அதற்குக் கீழே உள்ள ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆறு மாதப் பணிக்காலத்திற்கும் ஒரு வாரத்திற்கான அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும்.
65 முதல் 67 வரையிலான நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆறு மாதப் பணிக்காலத்திற்கும் இரண்டு வாரங்களுக்கான அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும். ஒருவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் எந்தப் பதவி நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+