Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணாடி போல உடைந்த உடல்.. மீட்கப்பட்ட டைட்டானிக் நீர்மூழ்கி பாகங்களை பார்த்தால் ஷாக்! என்ன இருந்தது?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அட்லாண்டிக்கில் கடலில் மூழ்கிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த பாகங்களை பார்த்த மீட்பு படையினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது.

 What was inside the recovered sinking ship Titan that went missing near by Titanic wreckage?

இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு சென்ற இந்த கப்பலில் ஏகப்பட்ட பணக்காரர்கள் இருந்தனர். 2,208 பயணிகளில் கிட்டத்தட்ட 1500 பேர் கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள். போகிற வழியில் கப்பல் 1912 ஏப்ரல் 15 அதிகாலையில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. சம்பவ இடத்திலேயே இதன் விளைவாக 1513 பேர் இறந்தனர்.

டைட்டானிக் பயணம்: இந்த மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க செல்வது என்பது உலகம் முழுக்க மிகப்பெரிய சுற்றுலாவாக இருக்கிறது. டைட்டானிக் கப்பலை பார்க்க கோடி கோடியாக செலவு செய்து பலர் செல்வதும் உண்டு. உள்ளே இருக்கும் பொருட்களை மீட்டு வந்து ஏலம் விடுவதற்கும், பிளாக் மார்க்கெட்டில் விற்பதற்கும் கூட பெரிய கும்பல் ஒன்று உள்ளது.

அந்த வகையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate. இவர்களின் நீர்மூழ்கி கப்பல்தான் தி டைட்டன்.டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. இதில் ஒரே ஒரு முறை.. டைட்டன் நீர் மூழ்கி சுமார் 2 மணி நேரங்கள் வரை காணாமல் போன சம்பவங்கள் கூட நடந்து உள்ளன.

ஆனால் அவை உடனே உடனே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் காணாமல் போய் உள்ளது. நான்கு நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின் இந்த கப்பல் வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது. கடலுக்கு அடியில் 4000 மீட்டரில் இருக்கும் அதீத பிரஷர் காரணமாக இந்த நீர்மூழ்கி வெடித்ததாக அறிவிக்கப்பட்டது.

தேடுதல் வேட்டையின் போது கடலில் உள்ளே நீர்மூழ்கியின் பாகங்கள் கிடைத்த நிலையில் இந்த கப்பல் வெடித்தாகி அறிவிக்கப்பட்டது. டைட்டன் கப்பலில் ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்து உள்ளனர். இவர்கள் எல்லோரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

பாகங்கள்: இந்த 4 நாட்கள் கழித்து அட்லாண்டிக்கில் கடலில் மூழ்கிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த பாகங்களை பார்த்த மீட்பு படையினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதன்படி மீட்கப்பட்ட பாகங்களில் பயணம் செய்தவர்களின் உடல் பாகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

உள்ளேயே இறந்து போனவர்களின் உடலின் சிதைந்த பாகங்கள் இருந்துள்ளன. ஒரு கூல் டிரிங்ஸ் டின் பாட்டிலை எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு உள்ளே சிறிய உயிரினம் ஒன்றை வைத்துவிட்டு.. அந்த டின்னை அதிக அழுத்தத்துடன் நசுக்கினால் எப்படி இருக்கும்? உள்ளே இருக்கும் உயிரினம் எப்படி நசுங்கி கண்ணாடி போல உடைந்து சாகும். அப்படித்தான் இந்த பயணிகளும் டைட்டன் கப்பல் உள்ளே பலியாகி உள்ளனர்.

நீருக்குள் இருந்ததால் பல பாகங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒரு சில செதில்கள் மட்டும் இந்த நீர்மூழ்கி உள்ளே ஓட்டி இருந்துள்ளது. அந்த பாகங்கள்தான் தற்போது கண்டிபிடிக்கப்பட்டு உள்ளன. அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் இந்தச் சிதைவுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+