வெள்ளை மாளிகைக்கு மேல் பறந்த பொருள்.. பங்கருக்குள் பதுங்கிய டிரம்ப்.. இன்னும் வெளிவராத மர்மம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வெள்ளை மாளிகைக்கு மேலே நேற்று இரவு பறந்து மர்ம பொருள் என்ன என்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபரின் வெள்ளை மாளிகை இருக்கும் வாஷிங்டன் மீது அனுமதி இன்றி மர்ம விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது என்ன விமானம், யாருக்கு சொந்தமானது என்ற விவரம் வெளியாகவில்லை.

இதனால் தற்போது வெள்ளை மாளிகைக்கு பூட்டு போடப்பட்டது. அதேபோல் தாக்குதல் அச்சம் காரணமாக அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு கீழே இருக்கும் பங்கருக்குள் அழைத்து செல்லப்பட்டார். அவர் நேற்று இரவு முழுக்க அங்குதான் இருந்தார் .

என்ன சாதனம்

என்ன சாதனம்

இந்த நிலையில் இந்த மரமான பறக்கும் சாதனம் மூன்று விஷயங்களாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்படி இது உண்மையிலேயே ஒரு விமானமாக இருக்கலாம். அனுமதி வாங்காமல் வேவு பார்க்கும் வகையில் அனுப்பப்பட்ட டிரோன் விமானமாக இருக்கலாம். ஆனால் இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இன்னொரு பக்கம் எப்படி

இன்னொரு பக்கம் எப்படி

இன்னொரு பக்கம் இது இயற்கையில் ஏற்பட்ட ஏதாவது மாற்றமாக இருக்கலாம். அதனால் காலநிலையில் ஏதாவது மாற்றம் ஏற்படும் நேரத்தில் இது போன்ற தோற்றங்கள் ரேடாரில் தோன்றும். அப்படியும் கூட இது இருக்கலாம். ஆனால் இது உறுதியாகவில்லை.

கடைசியில் என்ன

கடைசியில் என்ன

கடைசியாக இது மொத்தமாக சென்ற பறவைகளின் கூட்டமாக இருக்கலாம். அப்போது அங்கு பறந்து கொண்டு இருந்த வேறு ஒரு விமானத்தின் பைலட், பறவைகள் மொத்தமாக கூட்டமாக செல்வதை பார்த்து இருக்கிறார். அதனால் ரேடாரில் ஏதாவது தவறான சிக்னல் வந்து இருக்கலாம்.

குமிழ் போன்ற வடிவம்

குமிழ் போன்ற வடிவம்

பறவைகள் இப்படி மொத்தமாக செல்லும் போது ரேடாரில் குமிழ் போன்ற வடிவம் தெரியும். அதுவே பழைய ரேடார் என்றால், அது சமயத்தில் விமானம் போல தெரியும். இதன் காரணமாக நேற்று ரேடாரில் இப்படி தவறான தகவல்கள் கூட வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

என்ன பறந்தது

என்ன பறந்தது

ஆனால் இதுதான் வெள்ளை மாளிகைக்கு மேல் பறந்தது என்று இன்னும் உறுதியாக யாரும் சொல்லவில்லை. இன்னும் அங்கு விமானப்படை அதிகாரிகள் டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறார்கள். இன்னும் அங்கு பாதுகாப்பு முழுமையாக விலக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+