Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகமே அழிய போகுது.. பிரபலத்துக்கு ஆபத்து.. டிரம்புக்கு காது போயிடுச்சு! பலிக்குதா பாபா வங்கா கணிப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாபா வாங்கா சொன்னதுபோலவே, மறுபடியும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது, உலக மக்களை கலக்கமடைய செய்து வருகிறது.

பாபா வாங்கே - பல்கேரியாவை சேர்ந்த இவருக்கு கண்பார்வை கிடையாது.. தன்னுடைய 85ம் வயதில் அதாவது 1996-ம் வருடம் இறந்துவிட்டார். பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர், உலக மக்களால் இப்போதுவரை மதிக்கப்படுகிறார்.

Baba Vanga Donald Trump Putin

இதற்கு காரணம், தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டாராம் பாபா வங்கா..

பலிக்குமா: அந்தவகையில், கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொல்லியிருக்கிறார்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருப்பதுடன், அவைகளில் பல சம்பவங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும், அவர் சொன்னதுபோலவே நடந்தும் வருகின்றன.

இந்த "2024 க்கான தீர்க்கதரிசனத்தையும் பாபா வாங்கே எழுதிவைத்திருக்கிறார்.. இந்தியாவில் தீ, வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படும், புற்றுநோய்க்கான தீர்வு 2024ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும்.. ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்..

மூளையில் கட்டி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2024ம் ஆண்டில் தன்னுடைய சொந்த நாட்டை சேர்ந்த ஒருவராலேயே படுகொலை செய்யப்படுவார்.. டொனால்ட் டிரம்ப், 2024ம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார்.. அது அவரை காது கேளாதவர் ஆக்கிவிடும்.. மூளையில் கட்டி ஏற்பட்டு, அதனால் பெரிதாக பாதிக்கப்படுவார்" என்றெல்லாம் பாபா வாங்கா அன்றே கணித்து வைத்திருப்பதை கேட்டு உலக மக்கள் அதிர்ந்து போனார்கள்.

இப்போது இன்னும் கூடுதலாக அதிர்ச்சியில் உள்ளார்கள்.. காரணம், டிரம்பின் காதில், குண்டு துளைத்துவிட்டது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில், டிரம்பின் வலது காதின் மேல் பகுதியில் துளைத்தபடி குண்டுசென்றது.. இதில், ரத்தம் சொட்ட சொட்ட டிரம்ப் அழைத்து செல்லப்படும் வீடியோக்கள் இணையத்தில் வட்டமடிக்கின்றன

டிரம்ப்: பாபா வங்கா கணித்தபடியே 2024 -ம் ஆண்டில் ட்ரம்பின் காதுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. அப்படியானால், இவரது மற்ற கணிப்புகளும் பலித்து விடுமோ என்று உலக தலைவர்கள் பீதியில் உறைந்திருக்கிறார்களாம்.

வரும் 2025ம் ஆண்டுக்கான கணிப்பைகூட பாபா வாங்கா எழுதி வைத்திருக்கிறார்.. அதில், ஐரோப்பிய மோதலில், கண்டத்தின் பெரும் மக்கள் தொகை குறையும், 2028ல் மனிதகுலம் வீனஸை அடையும். 2033ல், துருவங்களில் பனி உருகுவதால், பூமியில் இருக்கும் கடல் மட்டம் அதிகரிக்கும்.. 2076 க்குள், மீண்டும் உலகத்தை கம்யூனிசம் ஆளும்.. 2130 ல் வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு ஏற்படும். 2170 ல் உலகளாவிய வறட்சி, 3005ல் செவ்வாய் கிரகத்தில் போர், 3797ல் பூமியின் அழிவு ஆரம்பமாகும் என்று கணித்துள்ளார்.

உலகம் அழியும்: அதாவது, 5079ம் ஆண்டு, இந்த ஒட்டுமொத்த உலகமுமே அழிந்துவிடுமாம்.. இந்த 5079 ஆண்டுவரைதான், ஆண்டுக்கு, 6 கணிப்பு வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் கணிப்புகளை எழுதிவைத்திருக்கிறார் பாபா வங்கா. அந்தவகையில், 5079ம் ஆண்டு, உலகம் முடிவுக்கு வரப்போவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+