கொரோனா பரவல் எப்போது முடிவிற்கு வரும்? சிம்பிளாக பதில் அளித்த உலக சுகாதார மைய இயக்குனர்!
நியூயார்க்: கொரோனா பரவல் எப்போது முடிவிற்கு வரும் என்ற கேள்விக்கு உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் பதில் அளித்துள்ளார்.
உலகம் முழுக்க கொரோனா பரவல் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வேக்சின் அதிகம் போடப்பட்ட நாடுகளில் கூட கொரோனா பரவல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. உலகம் முழுக்க 192,848,567 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
4,142,769 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க தற்போது பல நாடுகளில் மூன்றாம் அலை, நான்காம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 13,341,682 ஆக உயர்ந்துள்ளது.

பரவல்
இந்த நிலையில் உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் கொரோனா பரவல் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு முக்கியமான அறிவிப்போடு உங்களை சந்திக்கிறேன். உலகம் முழுக்க கொரோனா பரவலை மொத்தமாக தடுக்க மக்கள் உதவ வேண்டும். கொரோனாவிற்கு எதிராக மக்கள் முறையாக செயல்பட்டால் புதிய அலைகளில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியும்.

உலகம்
புதிய கேஸ்களை வேகமாக கண்டுபிடிக்க வேண்டும். உடனே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா மேலும் பரவுவது தடுக்கப்படும். வேகமாக கொரோனா கேஸ்களை கண்டுபிடிப்பதன் மூலம் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும்.

வைரஸ் பரவல்
கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடியும், பெருந்தொற்று எப்போது முடியும் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். என்னுடைய பதில் இதில் சிம்பிள். கொரோனா பரவல் மக்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும். மக்கள் எல்லோரும் கொரோனா பரவலை தடுக்க முன்வந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும்.

தடுப்பு
கொரோனா பரவலை தடுக்கும் அறிவியல்பூர்வமான சாதனங்கள் நம்மிடம் உள்ளது. நம்மிடம் வேக்சின் உள்ளது. உலகம் முழுக்க 70 சதவிகிதம் பேருக்காவது நாம் வேக்சின் போட வேண்டும். அடுத்த வருட பாதிக்குள் இத்தனை பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போட்டு இருக்க வேண்டும். இது கொரோனா பரவலை தடுக்க உதவும்.
Recommended Video

உழைப்பு
நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து கொரோனாவிற்கு எதிராக உழைக்க வேண்டும். உலக நாடுகள் மேலும் நெருக்கமாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நாம் ஒருவருடன் ஒருவர் போட்டியிட கூடாது, நாம் கொரோனாவுடன்தான் போட்டியிட வேண்டும்.

பல விஷயம்
கொரோனா பரவல் நமக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. பல கஷ்டமான விஷயங்களை நமக்கு இந்த கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது. இந்த கொரோனா பரவல் மனிதர்களின் வாழ்க்கை முறையை மொத்தமாக மாற்றி உள்ளது, என்று உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications