பழைய கார், இலவச ஆடைகள்.! உலகின் இளம் வயது பெண் கோடீஸ்வரரின் நம்பவே முடியாத வாழ்க்கை! தலை சுத்திடும்
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வயது பில்லியனர் லூசி குவோ. என்ன தான் பில்லியனராக இருந்தாலும் இவரது வாழ்க்கையைப் பார்த்தால் நீங்கள் இவர் கோடீஸ்வரர் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள். பழைய காரையே இன்னும் பயன்படுத்தும் லூசி குவோ, ஆடைகள் கூட பெரும்பாலும் குறைந்த ரேட்டில் இருப்பதைத் தான் வாங்குவாராம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகின் மிகக் குறைந்த வயதில் பில்லியனராக உருவெடுத்தவர் லூசி குவோ. மற்றவர்கள் குடும்ப பிஸ்னஸ் மூலம் கிடைத்த பணத்தால் இவரை விடக் குறைந்த வயதில் பில்லியனராகியுள்ள போதிலும், சுயமாகச் சம்பாதித்துக் குறைந்த வயதில் பில்லியனர் ஆனவர் என்ற சிறப்பை பெற்றவர் லூசி குவோ. 30 வயதான இவர் ஸ்கேல் AI என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

லூசி குவோ
அந்த நிறுவனத்தின் மதிப்பு சமீபத்தில் 25 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 1.25 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தும், குவோ எளிமையான வாழ்க்கை முறையையே விரும்புகிறார்.
பொதுவாக கோடீஸ்வரர்கள் உணவு, ஆடைகளுக்குத் தான் அதிகம் செலவு செய்வார்கள். ஆனால், லூசி அதற்கு நேர்மாறாகவே இருக்கிறார். பெரும்பாலும் விலை குறைந்த ஃபாஸ்ட் ஃபேஷன் ஆடைகளையே அணியும் லூசி, மிக அரிதாகவே டிசைனர் உடையை அணிவாராம்.. மேலும், பல கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் கூட இப்போதும் அவர் பழைய ஹோண்டா சிவிக் காரை தான் ஓட்டுகிறார். மேலும், விமானத்தில் செல்லும்போதும் கூட பிஸ்னஸ் கிளாஸை தவிர்த்துவிடுகிறார்.
பணத்தை வீணாக்க மாட்டேன்
இது தொடர்பாக லூசி குவோ ஃபார்ச்சூன் இதழுக்கு அளித்த பேட்டியில், "நான் பணத்தை வீணாக்க விரும்பவில்லை. என்னுடைய உதவியாளர் ஒரு பழைய ஹோண்டா சிவிக் காரில்தான் என்னை அழைத்துச் செல்வார். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் அணியும் ஆடைகள் பெரும்பாலும் இலவசமாகக் கிடைத்தவையாகவோ அல்லது குறைந்த விலைக்கு வாங்கியதாகவோ இருக்கும். ஓரிரு ஆடைகள் மட்டுமே தரமானதாக இருக்கும். இன்னுமே உணவு ஆர்டர் செய்யும் போது 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' ஆஃபர் இருக்கிறதா என பார்த்து, அதையே தான் ஆர்டர் செய்வேன்.
காரணம் இதுதான்!
டிசைனர் உடைகள், ஆடம்பர கார் போன்ற விஷயங்களுக்காகப் பணத்தை வீணாக்குகிறார்களோ, அவர்கள் மில்லியனராக போகிறார்கள் என அர்த்தம். அவர்கள் நட்பு வட்டாரத்தில் அனைவரும் பில்லியனர்களாக இருப்பார்கள். இதனால் கொஞ்சம் இன்செக்யூர் ஆக உணர்ந்து இதுபோல செய்வார்கள். வெற்றிகரமாக இருப்போர் அதை மற்றவர்களுக்குக் காட்டத் தேவையில்லை. நான் இதன் காரணமாகவே எளிமையான வாழ்க்கையை விரும்புகிறேன்
பலரும் அங்கீகாரம் தேடும் ஒரு முயற்சியாகவே இதுபோல ஆடம்பர செலவுகளைச் செய்வார்கள். ஆனால், உண்மையில் பில்லியனராக இருப்போர் யாரிடமும் அங்கீகாரம் பெற முயல மாட்டார்கள்.
யார் இந்த லூசி குவோ
அமெரிக்காவைச் சேர்ந்த லூசி குவோ ஒரு அமெரிக்க பிஸ்னஸ் வுமன். அவர் அக்டோபர் 14, 1994 அன்று கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அவரது பெற்றோர் சீனாவிலிருந்து குடியேறிய பொறியியல் வல்லுநர்கள். குவோ சிறு வயதிலேயே தொழில்நுட்பத்தில் திறமையாக இருந்தார். ஆறாம் வகுப்பு படிக்கும்போது இணையதளங்களை உருவாக்கினார். கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்தினாலும் தனது 21 வயதில் ஸ்கேல் AI நிறுவனத்தைத் தொடங்கினார்.
சில காரணங்களால் ஸ்கேல் AI நிறுவனத்தில் இருந்து லூசி குவோ வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் அவரது பங்கு அப்படியே இருக்கிறது. அதன் மூலமாகவே அவர் பல கோடிக்கு அதிபதியாக உள்ளார்.
-
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications