ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் 'M' யார்? இஸ்ரேல் களமிறக்கிய மொசாத் ஏஜென்ட்.. காரணமே இவர்தான்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அசாத்தியமான புத்திசாலித்தனம், நுட்பமான தந்திரம், நவீன தொழில்நுட்பம்... இந்த மூன்றையும் ஒருங்கே இணைத்து ஈரானுக்கு எதிரான போரில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் அவர்.. இது இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் (Mossad) இயக்குனர் டேவிட் பார்னியா, ஒரு வீரரின் நினைவிடத்தில் உருக்கமாகப் பேசிய வரிகள்.. இந்த வரிகள்தான் இப்போது சர்வதேச உலகளவில் ஹாட் டாபிக்.

ஈரானுடனான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், 'ஆப்ரேஷன் ரோரிங் லயன்' (Operation Roaring Lion) வெற்றிக்கு வித்திட்டு, பலியான அந்த மர்ம ஏஜென்ட் 'M' குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Who is Agent M

யார் இந்த 'M'?

இன்று நினைவஞ்சலி கூட்டத்தில் டேவிட் பார்னியா குறிப்பிட்ட அந்த 'M' வேறு யாருமல்ல; அவர்தான் எரேஸ் ஷிமோனி (Erez Shimoni). 50 வயதான இவர், மொசாட் அமைப்பில் சுமார் 30 ஆண்டுகள் ரகசிய ஏஜென்ட்டாகப் பணியாற்றியவர். 'பண்பான மனிதர், அமைதியானவர், மற்றவர்கள் மீது அன்பு கொண்டவர்' என பார்னியாவால் புகழப்படும் ஷிமோனி, களத்தில் இறங்கினால் எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்.

படகு விபத்தா? திட்டமிட்ட கொலையா?

சமீபத்தில் இத்தாலியின் மஜியோர் ஏரியில் (Lake Maggiore) சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஷிமோனி உயிரிழந்தார். அவருடன் இத்தாலிய உளவுத்துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் படகு கேப்டனின் மனைவியும் பலியாகினர்.

அப்போது இது சாதாரண விபத்தாகப் பார்க்கப்பட்டாலும், தற்போது இஸ்ரேல் - ஈரான் போர்ச் சூழலில் மொசாட் தலைவர் இவரைப் பற்றிப் பேசியிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஷிமோனியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட மொசாட் உயர் அதிகாரிகள் அனைவரும், தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடி மற்றும் தொப்பிகளை அணிந்திருந்ததே அவர் எவ்வளவு முக்கியமான நபர் என்பதற்கு சாட்சி.

ஆப்ரேஷன் ரோரிங் லயன் (Operation Roaring Lion)

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது தொடுத்த பிரம்மாண்ட ராணுவத் தாக்குதல்தான் இந்த 'ஆப்பரேஷன் ரோரிங் லயன்'. இந்த ஆப்பரேஷன் மூலம்தான் ஈரானின் உச்ச தலைவர் கமேனி படுகொலை செய்யப்பட்டார்.

இஸ்ரேல் ஆப்ரேஷன் : ஆப்பரேஷன் ரோரிங் லயன்.

அமெரிக்க ஆப்ரேஷன் : ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி (Operation Epic Fury).

இரண்டும் சேர்ந்து இப்போ ஒரே ஆப்பரேஷனாக நடத்தப்பட்டு வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் இப்போது தாக்குதல் நடத்துவது இந்த ஆப்பரேஷனுக்கு கீழ்தான். இந்தத் தாக்குதலுக்கான உளவுத் தகவல்களைத் திரட்டுவதிலும், ஈரானின் பாதுகாப்பு வளையங்களை உடைப்பதிலும் 'M' என்கிற ஷிமோனியின் பங்களிப்பு அளப்பரியது என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அவர் இஸ்ரேலுக்கு வெளியே உளவு வேலைகள் செய்துகொண்டிருந்தபோது வீரமரணமடைந்தார். ஆப்ரேஷன் ரோரிங் லயன் வெற்றியின் ஒவ்வொரு அணுவிலும் அவரது உழைப்பு இருக்கிறது," என டேவிட் பார்னியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரான் தன் வசம் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை நிறுத்தலாமா என யோசித்து வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த வெளிப்படையான வீரவணக்கம் ஈரானுக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

அஷ்கெலோன் நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷிமோனி எனும் 'M', இஸ்ரேலிய வரலாற்றில் ஒரு நிழல் உலக நாயகனாக நிலைபெற்றுவிட்டார். அவரது பணிகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இப்போதும், பாதுகாப்பு காரணங்களால் விவரிக்க இயலாது என்ற ஒற்றை வரியிலேயே மௌனம் காக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+