எப்படி பறக்குது? யார் ஓட்டுறா? ஏலியனா?.. யுஎப்ஓ பாகங்களை மீட்க போராடும் அமெரிக்கா.. அந்த மர்மம்!
முதல் யுஎப்ஓவின் பொருட்கள் அமெரிக்கா - கனடா எல்லையில் விழுந்துள்ளது. இதன் பொருட்களை மீட்க அமெரிக்க ராணுவம் விரைந்துள்ளது.
நியூயார்க்: அமெரிக்கா - கனடா எல்லையில் அடுத்தடுத்து யுஎப்ஓ சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவங்கள் உலக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட யுஎப்ஓக்களின் பாகங்கள் ஒன்று கூட இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வானத்தில் பறந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. நேற்று முதல்நாள் அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கனடா வானில் பறந்த மர்ம பொருள் அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இன்று அதிகாலை மூன்றாவது முறையாக அமெரிக்கா - கனடா எல்லையில் லேக் ஹுரோன் என்று பகுதியில் இன்னொரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. கனடா - அமெரிக்கா எல்லைக்கு அருகே பறந்து கொண்டு இருந்த போது இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவ தளவாடங்களுக்கு அருகே சென்றது
இந்த யுஎப்ஓ ராணுவ தளவாடங்களுக்கு அருகே சென்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பறக்கும் சாதனம் ராணுவ ஆராய்ச்சி மையங்கள், ராணுவ தளவாடங்களுக்கு அருகே சென்றது. அந்த பறக்கும் பொருள் பறந்த திசை, அதன் டேட்டா ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது அது ராணுவ தளவாடங்களுக்கு மிக அருகில் சென்றுள்ளது என்று பென்டகன் கூறியுள்ளது. ஆனால் இது என்ன மாதிரியான ராணுவ தகவல்களை திரட்டியது. அதில் கேமராக்கள் இருந்ததா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

மக்கள் இல்லாத இடங்களில் சுட்டனர்
இந்த யுஎப்ஓக்களை மக்கள் வசிக்காத பகுதிக்கு மேலே இருக்கும் வான் பகுதிகளில் சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதில் முதல் யுஎப்ஓ அலாஸ்கா அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன்பின் இரண்டு யுஎப்ஓக்கள் கனடா எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த மூன்றுமே மக்கள் இல்லாத பகுதிக்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. இந்த பாகங்கள் மக்கள் மீது விழ கூடாது என்பதால் இப்படி மக்கள் இல்லாத இடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.

கனடா எல்லை
முதல் யுஎப்ஓவின் பொருட்கள் அமெரிக்கா - கனடா எல்லையில் விழுந்துள்ளது. இதன் பொருட்களை மீட்க அமெரிக்க ராணுவம் விரைந்துள்ளது. ஆனால் அங்கே கடுமையான பனி நிலவுவதால் பாகங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஒரு யுஎப்ஓவின் பாகங்கள் ஏரியில் விழுந்து உள்ளது. அதன் பாகங்களையும் இன்னும் மீட்க முடியவில்லை. இதுவரை மூன்று யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. அந்த மூன்று யுஎப்ஓக்களின் பாகங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதிக பனி
பாகங்களை இன்னும் கண்டுபிடிக்காத காரணத்தால் பின்வரும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இதில் எஞ்சின் எதுவும் இல்லை. அப்படி இருக்க இந்த யுஎப்ஓ எப்படி பறக்கிறது?
யுஎப்ஓவில் பைலட் இல்லை. அப்படி என்றால் இதை யார் இயக்குவது?
எந்த தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது?
எந்த நாட்டிற்கு சொந்தமானது இது?
ஏலியன்களின் யுஎப்ஓ ஆ இது?
யுஎப்ஓ வேறு நாட்டிற்கு சொந்தமானது என்றால் எதற்காக இது பறக்க வைக்கப்படுகிறது?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications