டிரம்ப் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! சிஐஏ தலைவராகும் "இந்திய" மாஸ்டர்மைண்ட்! எதிர்பாராத ட்விஸ்ட்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றால்.. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்க மாட்டார். முக்கியமாக அரசு பதவிகளில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் டிரம்ப் அந்நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான சிஐஏ பதவிக்கே.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை கொண்டு வர உள்ளாராம்.
கடந்த முறை அவரின் ஆட்சியில் அவருக்கும் சிஐஏ தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மோதல்கள் நிலவி வந்தன. அந்த மோதல்களை சரி செய்யும் விதமாக இந்த முறை தனக்கு நெருக்கமான.. இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை அந்த பதவிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.

அமெரிக்காவின் அமைச்சர்கள் யார் யார் என்று விரைவில் டிரம்ப் தேர்வு செய்வார். அந்த வகையில் சிஐஏ இயக்குனர் பதவிக்கு குஜராத் பின்புலத்தை கொண்ட காஷ்யப் காஸ் பட்டேல் நியமிக்கப்படவுள்ளாராம். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். கடந்த டிரம்ப் ஆட்சியில்.. அவர் வெற்றிபெற ரஷ்யா காரணம் என்று புகார் வைக்கப்பட்டது. இந்த விசாரணையில் டிரம்பிற்கு பெரிய உதவியாக இருந்தது காஷ்யப் காஸ் பட்டேல்தான்.
அதேபோல் டிரம்பின் முந்தைய ஆட்சியில் பல முக்கியமான உளவு தகவல்கள்.. உளவு ரீதியான முடிவுகளை எடுக்க காஷ்யப் காஸ் பட்டேல் டிரம்பிற்கு காரணமாக இருந்தார். காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ தலைவராகும் முடிவை டிரம்ப் முன்பே எடுத்துவிட்டார். ஆனால் இதற்கு செனட் சபை அனுமதி அளிக்க வேண்டும். இரண்டு அவையிலும் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். செனட் சபையை கைப்பற்றிவிட்டார்.
இதன் காரணமாக காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ இயக்குனர் ஆவதில் சிக்கலே இருக்காது என்கிறார்கள். காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ தலைவராக முடியாத பட்சத்தில் அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குஜராத் பின்புலத்தை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் பல அரசு ரீதியான பணிகளை செய்துள்ளார். முக்கியமாக வழக்கறிஞரான இவர்.. பல அரசு தொடர்பான வழக்குகளில் வாதாடி உள்ளார்.
வெற்றி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு அரசியலில் மிக முக்கியமான வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் மட்டும் இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 295 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார்.
மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அவரின் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் டிரம்ப் 300 எலக்ட்ரல் வாக்குகள் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த இரண்டு மாகாணங்களிலும் டிரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார்.












Click it and Unblock the Notifications