பிரபல பாடகி யார்னு தெரியுதா.. மோடியை பாத்ததுமே காலில் விழுந்து.. வல்லரசு நாட்டை திணறடித்த "ஜன கன மன"
நியூயார்க்: பிரதமர் மோடியின் பாதத்தை தொட்டு வணங்கிய பாடகியின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.. என்ன காரணம்? யார் இந்த பாடகி?
3 நாள் சுற்றுப்பயணமாக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார்.. அங்கு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியதுடன், அதிபர் பிடன் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்திலும் பங்கேற்றிருந்தார்.. அத்துடன், தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
வெள்ளை மாளிகை: இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக, இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டடத்தில், பெரும் திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்..

மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த விழாவில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.. அதில் ஒன்றுதான், பாடகி மேரி மில்பெனின் இசை நிகழ்ச்சி ஆகும்..
யார் இந்த மேரி மில்பென்: மில்பென் ஓக்லஹோமா நகரில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்தவர்.. இவரது அம்மா பெந்தேகோஸ்தே இசை போதகராக வேலை பார்த்தவர்.. தாயின் இசை, மகள் மேரியையும் வெகுவாக பாதித்துவிட்டது.. சின்ன வயதில் இருந்தே, மேரிக்கு பாட்டு பாடுவதில் அலாதி பிரியம்.. அதனால் 5 வயதாக இருக்கும்போதே, ஓக்லஹோமா நகரில் உள்ள வைல்டுவுட் கிறிஸ்டியன் சர்ச்சில், குழந்தைகள் பாடும் குழுவில் சேர்ந்து பாட ஆரம்பித்துவிட்டார்..
நாளடைவில் இசைப்புலமையையும் வளர்த்து கொண்டார்.. மேரியின் திறமைதான் அவரை உலக நாடுகளுக்கு கொண்டு போய் சேர்த்தது.. இவர் ஒரு ஹாலிவுட் நடிகை என்பது கூடுதலான தகவலாகும். இந்திய அரசு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் ஆகியவற்றால் ஆகஸ்ட் 2022ல் இந்தியாவுக்கு வருமாறு மேரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கலாச்சாரம்: இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவில், மேரி இசை நிகழ்ச்சியும் நடத்தியிருக்கிறார். சுதந்திர தின விழாவிற்கு இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலால் இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட முதல் அமெரிக்க கலைஞர், பாடகி மேரிதான்.. அவர் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரப்பூர்வ விருந்தினராக வந்திருந்தார்.
“I will rest in the end, knowing that anything I did of great significance is because He (God) did it through me.”
— Mary Millben (@MaryMillben) June 23, 2023
Tonight as I perform the Indian National Anthem for Prime Minister @narendramodi and distinguished guests, India and Indian communities across the world, you are… pic.twitter.com/RXMVfLsCQg
இப்படிப்பட்ட அமெரிக்க பாடகிதான், நம் பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றிருந்தபோது, அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், நம்முடைய தேசிய கீதமான, "ஜன கன மன பாடி" அசத்தியிருந்தார்.
ஏற்கனவே, இதே "ஜன ஜன மன" மற்றும் "ஓம் ஜெய் ஜெகதீஷ்" ஆகிய பாடல்களை பாடி, இந்தியாவில் பிரபலமானவர் மேரி, வாஷிங்டனிலும் நம்முடைய தேசிய கீதத்தை பாடி கலக்கினார்.. பாடி முடித்ததுமே, அங்கிருந்த மோடியின் காலில் விழுந்து மேரி ஆசியும் பெற்றார். அப்போது "நமஸ்தே" என்று சொல்லி, பிரதமரின் பாதம் தொட்டு வணங்கினார்.
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக அறிக்கை ஒன்றை மேரி வெளியிட்டிருக்கிறார்.. அந்த அறிக்கையில், "தொடர்ந்து 4 அமெரிக்க அதிபர்களுக்காக அமெரிக்க தேசிய கீதம் மற்றும் தேசபக்தி பாடல்களை பாடிய நான், பிரதமர் மோடிக்காகவும், இந்திய தேசிய கீதத்தை பாடுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நெகிழ்ச்சி: இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமரின் பாதம் தொட்டு வணங்கிய வீடியோவும், இதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட ட்வீட்டும்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications