Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திக்திக்.. பிடனின் ரகசிய உக்ரைன் பயணத்தில்.. சீக்ரெட்டாக உடன் சென்ற இந்திய பெண்.. யார் இந்த சபரினா?

பிடனுடன் சிறிய ஆர்மி டீம், ஒரு மெடிக்கல் டீம், 2 செய்தியாளர்கள், 2 ஆலோசகர்கள் மட்டும் சென்றுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பிடனின் உக்ரைன் பயணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவரும் உடன் பயணம் செய்தது கவனம் பெற்றுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடங்கியது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையிலும், உக்ரைனில் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் அமைக்கப்படுவதை எதிர்க்கும் வகையிலும் ரஷ்யா திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இந்த போருக்கு இடையில் தற்போது அமெரிக்க அதிபர் பிடன் நேற்று திடீரென உக்ரைன் சென்றார். அவர் இப்படி திடீரென உக்ரைன் பயணம் மேற்கொண்டது, உலக அரசியலில் பெருமளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த பயணத்தை பிடன் மிகவும் சீக்ரெட்டாக திட்டமிட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க நேரடிப்படி அதிகாலை 4 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிபர் பிடன் ஏர் போர்ஸ் 757 விமானத்தில் ஏறி இருக்கிறார்.

எப்படி சென்றார்

எப்படி சென்றார்

இவர்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் ராணுவ தளத்தில் இருந்து ஜெர்மனி வழியாக சென்றுள்ளனர். ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் எரிபொருள் நிரப்பி உள்ளனர். உள்ளே இருந்து வெளியே யாரும் அந்த நேரத்தில் செல்லவில்லை. அதன்பின் போலந்து சென்றுள்ளனர். அங்கே இருந்து பின்னர் இவர்கள் உக்ரைனுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். போலந்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் இருந்து ரயிலில் உக்ரைன் பார்டர் சென்று அங்கிருந்து பின்னர் மீண்டும் காரில் சென்றுள்ளனர்.

பயணம்

பயணம்

அமெரிக்க அதிபர் பிடனின் இந்த உக்ரைன் பயணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவரும் உடன் பயணம் செய்தது கவனம் பெற்றுள்ளது. பிடனுடன் சிறிய ஆர்மி டீம், ஒரு மெடிக்கல் டீம், 2 செய்தியாளர்கள், 2 ஆலோசகர்கள் மட்டும் சென்றுள்ளனர். இந்த இரண்டு செய்தியாளர்களும் ரகசிய காப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டனர். பிடனுக்கு எதுவும் ஆகும் பட்சத்தில் அதை செய்தியாக, நம்பகத்தன்மையுடன் வெளியிட இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பொதுவாக அதிபர் பயணம் செய்தால் அவருடன் 13 செய்தியாளர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு செய்தியாளர், ஒரு வீடியோகிராபர் மட்டுமே சென்றுள்ளனர். அந்த ஒரு செய்தியாளர்தான் சபரினா சித்திக். வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி நிறுவனத்தை சேர்ந்த இவர்தான் அதிபருடன் ரகசியமாக பயணம் செய்தவர். அந்த பயணம் மேற்கொள்வதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்புதான் சபரினாவிற்கு போன் சென்றுள்ளது. வாஷிங்டனில் இருக்கும் o Joint Base Andrews தளத்திற்கு வரும்படி அழைப்பு சென்றுள்ளது.

யார் இவர்?

யார் இவர்?

அங்கே சென்ற சபரினாவிடம் போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் பிடன் மீண்டும் உக்ரைன் செல்லும் வரை அவரிடம் போன் வழங்கப்படவில்லை. சபரினா இந்த பயணத்தில் விமானத்தில் இருக்கும் போது பிடனை பார்க்க முடியவில்லை. இடையில் காருக்கும், ரயிலுக்கு மாறிய போதும் பிடனை பார்க்க முடியவில்லை. கடைசியில் உக்ரைன் தலைநகரை நெருங்கும் 5 கிமீ தூரத்திற்கு முன்புதான் சபரினா பிடனை இந்த பயணத்தில் பார்த்து உள்ளார். மிகவும் சீக்ரெட்டாக இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளனர்.

பின்னணி

பின்னணி

அதிபர் பிடனின் இந்த சர்வதேச அளவிலான மிக முக்கியமான பயணத்திற்கு 2 செய்தியாளர்கள் மட்டுமே சென்றது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சபரினா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவர் இந்தியர் அப்பா - பாகிஸ்தான் அம்மாவிற்கு பிறந்தவர். 1986ல் அமெரிக்காவில் பிறந்த சபரினா தொடக்கத்தில் 10 ஆண்டுகள் ரோமில் வாழ்ந்து வந்தார். அதன்பின் 2012 ஊடக துறைக்கு வந்தார். இரண்டு அதிபர் தேர்தல்களை நேரடியாக இவர் கவர் செய்துள்ளார். தி கார்டியன், சிஎன்என், பிபிசி ஆகிய ஊடகங்களில் பணியாற்றி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+