எய்ட்ஸ்.. உடலுறவு வைத்தால்தானே எச்.ஐ.வி பரப்ப முடியும்? 50 பேரா? நீதிபதிக்கு வந்த கடுங்கோபம்.. சபாஷ்
நியூயார்க்: யார் இந்த அலெக்சாண்டர் என்று அமெரிக்காவே வாயடைத்து போயிருக்கிறது.. அவர் செய்த காரியத்தை பார்த்து நீதிபதியே அதிர்ந்துவிட்டார்..
எப்போதுமே நம்முடைய இந்தியாவிலுள்ள ஜெயில்களில், வருடா வருடம் சிறைக்கைதிகளுக்கு ஹெல்த் செக்கப் நடத்துவது வழக்கம்... அப்படித்தான், உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ சிறைச்சாலையில், கடந்த வருடத்துக்கான உடல் பரிசோதனை, டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.. அதன் முடிவுகள் இப்போது வெளியாகியிருந்தது.

அதன்படி, புதிதாக ஜெயிலுக்கு வந்த 36 கைதிகளுக்கு ஹெச்ஐவி இருப்பது உறுதியானது.. அப்படியானால், ஏற்கனவே உள்ள கைதிகளுடன் சேர்த்து மொத்தம் 63 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதற்கு காரணம், ஹெச்ஐவி பரிசோதனைக் கருவிகள் கிடைக்காமல் போய்விட்டதாம்.. அதனால்தான், டெஸ்ட் எடுக்க தாமதமாகிவிட்டதாக சொல்கிறார்கள்..
ஊசிகள்: அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களாம்.. இவர்கள் ஜெயிலுக்கு வருவதற்கு முன்பே, பலர் பயன்படுத்திய ஊசிகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.. அதனால்தான், இந்த நோய்க்கு ஆளாகியிருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகப்படுகிறார்கள். இப்போது எச்ஐவி பாதித்த எல்லாருக்குமே சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறதாம்..!
பரிசோதனை செய்ய கருவிகள் கிடைக்காமல், நம்முடைய நாட்டு சிறையில் நிலைமை இப்படியென்றால், அமெரிக்க சிறையில் நடந்துள்ள சம்பவம் இதற்கு நேர்மாறாக உள்ளது.
சிறுவன்: அந்த இளைஞர் பெயர் அலெக்சாண்டர்.. 34 வயதாகிறது.. கடந்த ஆகஸ்ட் மாதம், சோஷியல் மீடியாவில் 15 வயது சிறுவனுடன் அலெக்ஸாண்டருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் சிறுவனிடம் ஆபாசமாக பேச ஆரம்பித்திருக்கிறார் அலெக்ஸாண்டர்.. அந்த சிறுவனும் பதிலுக்கு பாலியல் உரையாடலை தொடர்ந்திருக்கிறான்.
ஒருகட்டத்தில், சிறுவனுடன் உறவு கொள்ள முடிவு செய்தார் அலெக்ஸாண்டர். இதற்காக சிறுவனிடம் பேசி, இடத்தையும், நேரத்தையும் குறித்தார்.
ரகசிய போலீஸ்: சம்பவத்தன்று எதிர்பார்த்தபடியே, சிறுவனும் வந்துசேர்ந்தான்.. ஆனால், அலெக்ஸாண்டர் மிரண்டே போய்விட்டார்.. அங்கு வந்தது சிறுவன் இல்லை.. இத்தனை நாளும் சிறுவனை போல ஆன்லைனில் பேசிவந்தது ரகசிய போலீஸ்காரர். அலெக்ஸாண்டரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, சிறுவன் போல பேசி, தன் வலையில் சிக்க வைத்தார் போலீஸ்காரர்..
அப்போதுதான் தெரிந்தது அலெக்ஸாண்டருக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது.. தனக்கு இந்த தொற்று இருப்பது தெரிந்தும்கூட, வேண்டுமென்றே சிறுவனுடன் உறவு வைத்து கொள்ள திட்டமிட்டதும் தெரிய வந்தது.. ரொம்ப காலமாகவே, இந்த எச்ஐவி தொற்று அலெக்ஸாண்டருக்கு இருக்கிறதாம். ஆனாலும் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளவில்லையாம்.உறவு: தனக்கு வந்த இந்த பாதிப்பு பிறருக்கும் பரவ வேண்டும் என்பதற்காக, இதுவரை 50 ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் உறவு வைத்து கொண்டாராம் அலெக்ஸாண்டர்.. உறவின் மூலம் வேண்டுமென்றே எச்ஐவி பரவ வேண்டும் என்பதே அலெக்ஸாண்டரின் நோக்கமாக இருந்திருக்கிறது.
இதையடுத்து, அலெக்ஸாண்டர் கைது செய்யப்பட்டார்.. கோர்ட்டில் கொண்டுபோய் அலெக்ஸாண்டரை போலீசார் நிறுத்தினார்கள்... 15 வயது சிறுவர்கள் முதல், 50 வயது நபர்கள் வரை பல்வேறு ஆண்களுடன் உறவு வைத்திருந்தது குறித்து அலெக்ஸாண்டர் கோர்ட்டில் சொன்னார்.
அதிரடி தீர்ப்பு: இதையடுத்து, 30 வருட ஜெயில் தண்டனையை அலெக்ஸாண்டருக்கு நீதிபதி விதித்தார்.. உங்களது நடத்தை வேட்டையாடும் ஒரு "வெப்ஸ்டரின்" வரையறையாக இருந்தது என்று அலெக்சாண்டருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி தன்தீர்ப்பின்போது கூறினார்.
ஆக, அலெக்சாண்டருக்கு இப்போது 34 வயதாகிறது.. இன்னும் 30 வருடம் என்றால்?? ஆயுசுக்கும் "அமெரிக்க களி"தான் போல..!!
அதிரடி தீர்ப்பு: சிறுவர்கள் உட்பட 50 பேருக்கு நோய்த்தொற்றை பரவவிட்டதால், 30 வருட ஜெயில் தண்டனையை அலெக்ஸாண்டருக்கு நீதிபதி விதித்து தீர்ப்பளித்தார்.. "உங்களது நடத்தை வேட்டையாடும் ஒரு "வெப்ஸ்டரின்" வரையறையாக இருந்தது" என்று தன்னுடைய தீர்ப்பின்போது, அலெக்ஸாண்டரிடம் கூறினார் நீதிபதி.
ஆக, அலெக்சாண்டருக்கு இப்போது 34 வயதாகிறது.. இன்னும் 30 வருடம் என்றால்?? ஆயுசுக்கும் "அமெரிக்க களி"தான் போல..!!
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
F-18 போர் விமானத்தை வெற்றிகரமாக தாக்கினோம்.. வீடியோ வெளியிட்ட ஈரான்.. அமெரிக்கா சொல்வது என்ன? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை











Click it and Unblock the Notifications