ஒரே ஒரு பாலியல் தொழிலாளி.. ஏகப்பட்ட கஸ்டமர்! இந்தம்மாவுக்கு எய்ட்ஸ் இருக்காம்.. முழிக்குது அமெரிக்கா
நியூயார்க்: ஒரே ஒரு பெண்ணால், ஒட்டுமொத்த அமெரிக்காவும் டென்ஷனில் உளளது.. இந்த பெண்ணால்தான், அங்கே பெரும் பரபரப்பும ஏற்பட்டுள்ளது.. யாரிந்த பெண்? என்ன நடந்தது?
சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது.. அலெக்சாண்டர் என்ற 34 வயது நபர், சோஷியல் மீடியாவில் 15 வயது சிறுவனுடன் நட்பானார்.. ஒருகட்டத்தில் சிறுவனிடம் ஆபாசமாக பேச ஆரம்பித்திருக்கிறார் அலெக்ஸாண்டர்.. அந்த சிறுவனும் பதிலுக்கு பாலியல் உரையாடலை தொடர்ந்திருக்கிறான்.

சிறுவன்: ஒருகட்டத்தில், சிறுவனுடன் உடலுறவு கொள்ள முடிவு செய்தார் அலெக்ஸாண்டர். இதற்காக சிறுவனிடம் பேசி, இடத்தையும், நேரத்தையும் குறித்தார்..
சம்பவத்தன்று, அலெக்ஸாண்டர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, சிறுவனுக்கு பதிலாக போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார்.. இத்தனை நாளும் சிறுவனை போலவே, ஆன்லைனில் பேசிவந்தது இந்த ரகசிய போலீஸ்காரர்தான்.. அலெக்ஸாண்டரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படி சாதுர்யமாக பேசி வரவழைத்திருக்கிறார்.
நோய் தொற்று: சிறையில் அடைக்கும்போது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.. அப்போதுதான் அலெக்ஸாண்டருக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது.. தனக்கு இந்த தொற்று இருப்பது தெரிந்தும்கூட, எந்த மருந்தையும் இவர் எடுத்துக் கொள்ளவில்லையாம். அதற்கு பதிலாக, இந்த தொற்று பாதிப்பு, பிறருக்கும் பரவ வேண்டும் என்பதற்காக, 50 ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் உறவு வைத்து கொண்டாராம் அலெக்ஸாண்டர். இறுதியில் அலெக்ஸாண்டருக்கு 30 வருடம் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு சம்பவம் இதே போல, இதே அமெரிக்காவில் நடந்துள்ளது.. ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் லிண்டா லெக்சேஸ்.. இவர் ஒரு பாலியல் தொழிலாளி.. இவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருக்கிறது. இவரை பார்த்துதான், அமெரிக்காவே நடுநடுங்கி கிடக்கிறது.
எய்ட்ஸ்: இந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் இருக்கிறது.. ஆனால், தனக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருக்கிறது என்று தெரிந்தும்கூட, 200க்கும் மேற்பட்ட கஸ்டமர்களுடன் தொடர்பு வைத்திருந்தாராம்.. இந்த விஷயத்தை போலீசாரே கண்டுபிடித்திருக்கிறார்கள்.. இதனால், அந்த லிண்டாவுடன் யாரெல்லாம் பாலியல் ரீதியாக தொடர் வைத்து கொண்டீர்களோ, தாமாகவே முன் வந்து மெடிக்க செக்கப்பை செய்து கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள் போலீஸார்.
இப்படி ஒரு அறிவிப்பை கேட்டு, லிண்டாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் வெலவெலத்து போயிருக்கிறார்கள். இந்த லிண்டா, கடந்த 2022 ஜனவரி முதல் மே மாதம் வரை, அதாவது வெறும் 5 மாதத்தில், 200க்கும் மேற்பட்டவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தாராம்.. அப்போதுதான் எச்ஐடி பாசிட்டிவ்-க்கான அறிகுறிகள் தனக்கு இருப்பதாகவும் லிண்டாவுக்கு தெரியவந்துள்ளது..
அப்படி தெரிந்தும்கூட, வருமானம் போய்விடுமே என்ற எண்ணத்தில், பாலியல் தொழிலை கைவிடாமல் இருந்திருக்கிறார்.. தன்னை நாடி வந்த எல்லாருக்குமே எய்ட்ஸ் பரப்பி இருக்கிறார்.. ஓஹியோ மாகாணத்தின்படி, இதெல்லாம் சட்டப்படி குற்றமாகும். .
லிண்டா: இப்போது விஷயமென்னவென்றால், லிண்டாவிடம் வந்த கஸ்டமர்கள் யார் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லையாம்.. அதனால் அவர்களை எப்படி அலர்ட் செய்வதென்று தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி வருகிறார்கள்.. இதுவரைக்கும், லிண்டாவுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தவர்களில் 211 நபர்கள் மட்டும் தாமாக முன்வந்து மெடிக்க செக்கப் செய்து கொள்ள வந்துள்ளனராம்.
ஆனாலும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு எச்ஐவி பரவிக்கொண்டிருக்கும் என்கிறார்கள்.. இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "புளோரிடாவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை பரவலான இடங்களில் ஆய்வு செய்து வருகிறோம்.. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்" என்கிறார்கள்.
போலீஸார்: அதாவது, லிண்டாவுடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்த கஸ்டமர்கள் யாரென்று தெரிந்தால்தான், அந்த கஸ்டமர்கள் வேறு யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை அடையாளம் காண முடியுமாம்.
லிண்டாவை தேடி வந்த கஸ்டமர்கள் மட்டும் 200 பேர் என்றால், இந்த 200 பேர் மூலமாக, இந்த 2 வருடத்தில், பல்லாயிரம் பேருக்கு, வைரஸ் பரவியிருக்கலாம் என்பதால், தலையில் இடி விழுந்தது போல உட்கார்ந்திருக்கிறார்கள் அமெரிக்க போலீஸார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications