நியூயார்க் மேயராகும் முதல் முஸ்லீம்.. இந்திய பின்னணி.. திமுக ஸ்டைல் வாக்குறுதி.. யார் இந்த மம்தானி?
நியூயார்க்: நியூயார்க் மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட மம்தானி 50.5% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சியின் சில்வா வெறும் 7.2% வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். அமெரிக்கா முழுவதும் பல உள்ளூர் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?
உகாண்டாவில் பிறந்த ஜோஹ்ரான் மம்தானி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தனது ஏழு வயதில் குடும்பத்துடன் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார். பிரான்க்ஸ் அறிவியல் உயர்நிலைப் பள்ளியில் படித்து, பின்னர் போவ்டோயின் கல்லூரியில் ஆப்பிரிக்க ஆய்வுகளில் பட்டம் பெற்றார். அங்கு அவர் பாலஸ்தீன நீதிக்கான மாணவர் அமைப்பின் வளாகக் கிளையை இணைந்து நிறுவினார்.
தீவிர சமத்துவம் பேசக்கூடியவர், கம்யூனிச ஆதரவாளர், உலகம் முழுக்க கம்யூனிச நாடுகளில் உள்ள நல்ல திட்டங்களை புகழ கூடியவர் என்று இவரின் அரசியல்பாணி அமெரிக்காவின் அரசியலபாணிக்கு நேர் எதிரானது. இவர் பல மொழி பேசக்கூடியவர். நியூயார்க் மேயர் பிரச்சாரத்தில் இவரின் இன்ஸ்டாகிராம் பிரச்சாரம் கவனம் பெற்றது.
ஜோஹ்ரான் மம்தானி அசத்தல் அரசியல்
அவர் தனது முஸ்லிம் மதத்தை தனது பிரச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக ஆக்கினார். அவர் தொடர்ந்து மசூதிகளுக்குச் சென்று, நகரத்தின் வாழ்க்கைச் செலவு நெருக்கடி குறித்து உருது மொழியில் ஒரு பிரச்சார வீடியோவை வெளியிட்டார். முக்கியமாக அமெரிக்க இந்தியர்களை கவரும் விதமாக இவர் வெளியிட்ட வீடியோக்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. அவர் சில பிரச்சார வீடியோவை உருது மொழியில் வெளியிட்டார் மற்றும் பாலிவுட் படக் காட்சிகளைப் பயன்படுத்தினார். மற்றொரு வீடியோவில் அவர் ஸ்பானிய மொழி பேசினார்.
மம்தானி மற்றும் அவரது மனைவியான ப்ரூக்ளினைச் சேர்ந்த ரமா துவாஜியை டேட்டிங் ஆப் 'ஹிஞ்ச்' மூலம் சந்தித்தனர். இந்த காதல் கதையும் நியூயார்க் மேயர் தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டது. அவரது தாயார், மீரா நாயர், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், மற்றும் அவரது தந்தை பேராசிரியர் மஹ்மூத் மம்தானி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார். இருவரும் ஹார்வர்ட் முன்னாள் மாணவர்கள்.
அரசியலுக்கு முன் என்ன செய்தார்?
அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் வீட்டுவசதி ஆலோசகராக பணியாற்றினார். க்வீன்ஸில் உள்ள குறைந்த வருவாய் கொண்ட வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக போராட உதவினார். ரியல் எஸ்டேட் தொடர்பாக பல பணிகளை செய்தார்.
அவர் தனது திட்டங்களாக, நகரம் முழுவதும் தமிழ்நாட்டில் உள்ளது போல இலவச பேருந்து சேவை, பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவது, நியூயார்க் முழுக்க வாடகையை கட்டுப்படுத்துதல் மற்றும் பொறுப்பற்ற நில உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம், குறைந்த விலையில் விற்கும் ரேஷன் ஸ்டைல் மளிகைக் கடைகள், ஆறு வாரங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான உலகளாவிய குழந்தை பராமரிப்பு, கர்ப்பிணி பெண்களுக்கு பராமரிப்பு செலவு என்று உள்ளிட்ட பல திமுக ஸ்டைல் திராவிட - கம்யூனிச சித்தாந்த அறிவிப்புகளை வாக்குறுதிகளாக கொடுத்தார். இந்த நிலையில்தான் நியூயார்க் மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications