அமெரிக்க அதிபர் தேர்தலை வெல்லப்போவது யார்? அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வெளியான கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. வேட்பாளர்கள் டிரம்ப் - கமலா ஆகியோரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. பல்வேறு கருத்து கணிப்பு நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள் சார்பாக இந்த கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

முன்னதாக டிரம்ப் - பிடன் இடையே போட்டி இருந்த போது டிரம்ப்தான் வெற்றிபெறுவார் என்று கூறப்பட்டது. கணிப்புகள் டிரம்பிற்கு ஆதரவாக இருந்தன. இப்போது கணிப்புகள் மாற தொடங்கி உள்ளன.

us presidential election 2024 kamala harris donald trump

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற, ஒரு வேட்பாளர் 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 எலக்ட்ரல் வாக்குகளைப் பெற வேண்டும். Electoral College வாக்குகள் மாநிலங்கள் முழுவதும் அவற்றின் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு இருக்கும்.

FiveThirtyEight இன் தினசரி தேர்தல் கருத்துக்கணிப்புபடி, கமலா ஹாரிஸ் தேசிய அளவிலான வாக்கெடுப்பில் முன்னணியில் உள்ளார். அவர் 48.1% வாக்குகளை பெறுவார்கள். முன்னாள் அதிபர் டிரம்பை விட 1.9 சதவீத புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். டிரம்ப் 46.4% வாக்குகளை பெறுவார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் கருத்துக் கணிப்பில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 47 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹாரிஸுக்கு வாக்களிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதே 47சதவீதம் பேர் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்..

Reuters/Ipsos வெளியிட்ட கருத்துக் கணிப்பில் டிரம்ப் 43 சதவீதம் பெறுவார்., ​​46 சதவீதம் பெற்று கமலா ஹாரிஸ் முன்னிலை பெறுவார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் தேர்தல்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியமான கட்டமாக கருதப்படும், அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது. ஏபிசி சேனல் மூலம் இந்த விவாதம் 90 நிமிடம் நடந்தது. முன்னதாக அதிபர் பிடன் - முன்னாள் அதிபர் டிரம்ப் இடையே விவாதம் நடக்க.. அதில் பிடன் மோசமாக சொதப்பினார். அதன்பின் அதிபர் தேர்தலில் இருந்து பிடன் விலக துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்.. பிடன் போல கமலா ஹாரிஸை எளிதாக "bully" செய்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டுதான் விவாதத்திற்கு வந்தார். ஆனால் விவாதத்தில் நடந்தது அதற்கு எதிர்மாறான சம்பவம். பிடன் போல என்னை எளிதாக சீண்டிவிட முடியாது என்பதை தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ் பல இடங்களில் நிரூபித்துக்காட்டினார். இப்போது கமலா ஹாரிஸ் வருகைக்கு பின் கணிப்புகள் மாற தொடங்கி உள்ளன.

கடந்த பத்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் ஒன்பது தேர்தலை துல்லியமாகக் கணித்த பிரபல வரலாற்றாசிரியரான ஆலன் லிக்ட்மேன், இந்த தேர்தலை கண்டித்துள்ளார். இந்த முறை தேர்தலில் பெரிய சர்ப்ரைஸ் இருக்காது . பலரும் கமலா ஹாரிஸ் வெல்வார் என்று நினைக்கிறார்கள். அதுதான் நடக்க போகிறது. தேர்தலுக்கு முந்தைய இறுதி வாரங்களில் எந்தவொரு எதிர்பாராத நிகழ்வும் முடிவை மாற்ற வாய்ப்பில்லை.

கணிப்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட அதிக புள்ளிகளை பெறுவதால் அவரே வெற்றிபெறுவார், என்று ஆலன் லிக்ட்மேன் கணித்துள்ளார்.

Lichtman இன் தேர்தல் கணிப்புகள் "13 கீ" எனப்படும் தனித்துவமான மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை, இது 13 வகையான கேள்விகளின் மூலம் செய்யப்படும் கணிப்பு ஆகும். தற்போதைய வேட்பாளர்களின் செயல்பாடு, வலிமை ஆகியவற்றை வைத்து வெற்றியாளர்களை மதிப்பிடும் முறையாகும். இந்த முறை மட்டுமன்றி தி எக்கனாமிஸ்ட், டைம்ஸ் ஆகிய ஊடகங்களுக்கும் கமலா ஹாரிஸ்தான் 54% வெல்ல வாய்ப்பு உள்ளது, டிரம்பிற்கு 46% மட்டுமே வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+