சர்வதேச அளவில் இந்துக்கள் மீது வெறுப்பு உமிழப்படுவது ஏன்? விவேக் ராமசாமி தந்த தரமான பதிலடி
நியூயார்க்: அமெரிக்காவில் குடியரசுக் கட்சியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கும் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையிலான சமீபத்திய உரையாடல் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. "இந்து மதம் ஒரு பொல்லாத மதம்.. அது வேற்று மதம்" என்று அவர் கூறியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் இந்துக்களுக்கு எதிராக திணிக்கப்படும் வெறுப்புகளும்.. இந்துக்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கும் எடுத்துக்காட்டாக இந்த உரையாடல் மாறி உள்ளது.
அமெரிக்கரின் பேச்சுக்கு விவேக் ராமசாமி முறையான பதிலடியை கொடுத்து இருந்தார். இந்து மதத்தின் உள்ளார்ந்த சகிப்புத்தன்மைக்கு அவரின் பதில் சிறந்த எடுத்துக்காட்டு. ஆனாலும் இந்து மதம் மீது எப்படி திட்டமிடப்பட்டு வெறுப்பு திணிக்கப்படுகிறது.. இந்து மதத்திற்கு எதிராக எப்படி வேறுபாடு காட்டப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த உரையாடல் அமைந்துள்ளது.

அமெரிக்காவில், சில சுவிசேஷ குழுக்கள் பொதுவாக பிற மதத்தினரை விமர்சிப்பது அதிகம். முக்கியமாக ஆபிரகாமில்லாத நம்பிக்கைகளை.. குறிப்பாக இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக நீண்ட காலமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக அவர்களின் மத கோட்பாடுகளுக்கு ஏற்றதாக இல்லை என்றால் மற்ற மதங்களை கடுமையாக விமர்சிப்பது.. வெறுப்பை உமிழ்வது அங்கே அதிகரித்து வருகிறது.
இதேபோன்ற வெறுப்பை எதிர்கொள்ளும் போதெல்லாம் இஸ்லாம், கிறிஸ்துவம் பல்வேறு நாடுகளில் பெரிய அளவில் எதிர்வினைகளை ஆற்றி உள்ளது. ஆனால் அதே சமயம் இந்து மதம் மீது வெறுப்பை உமிழும் போது.. யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொண்டு விமர்சிக்காமல், பதிலடி கொடுக்காமல் உள்ளனர். இந்து மதத்தின் உள்ளார்ந்த சகிப்புத்தன்மைக்கு, சாத்வீகத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
கீழே தரப்பட்டுள்ள ராமசாமிக்கும்.. அமெரிக்கர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் இதற்கு சிறந்த உதாரணம். இந்த உரையாடலில் ராமசாமி பெரிதாக பிரச்சனை செய்யாமல்.. முறையான கருத்துக்களோடு பதிலடி கொடுத்து சாந்தமாக விவாதத்தை எடுத்து வைத்துள்ளார்.
ராமசாமி ட்வீட்:
Some on the left reject Thomas Jefferson because he was a “slaveholder.” Some on the right reject him because he was a “deist” & “an enemy of Christianity.” Both are foolish. A fun teaching moment tonight. 🇺🇸 pic.twitter.com/kpuXMJhz95
— Vivek Ramaswamy (@VivekGRamaswamy) October 16, 2024
நிகழ்ச்சி ஒன்றில் "இந்து மதம் ஒரு பொல்லாத மதம்.. அது வேற்று மதம்" என்று அமெரிக்கர் ஒருவர் கூறியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதற்கு ராமசாமி மேடையிலேயே பதிலடி கொடுத்தார். இதே போன்ற விமர்சனங்கள்.. கருத்துக்கள் இந்தியாவில் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக வைக்கப்பட்டு இருந்தால் பெரிய களேபரமே வெடித்து இருக்கும். ஆனால் விவேக் ராமசாமி சாந்தமாக பதிலடி கொடுத்து கவனம் ஈர்த்தார். பொதுவாக இந்து மதத்தில் சகிப்புத்தன்மை இல்லை, இந்துத்துவா சகிப்பற்ற தன்மையை பரப்புகிறது என்று ஒரு தவறான வாதம் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக சகிப்பற்ற நாடாக மாறி வருவதாக கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக சர்வதேச சக்திகள் இந்தியா மீது கரை ஏற்படுத்தும் பணிகளை செய்து வருகின்றன. இது போன்ற கருத்துகளுக்குத்தான் ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
கன்வால் சிபல் ட்வீட்:
If there had been such a publicised exchange in India where a Hindu in a debate with an Indian Christian leader lashed out at Christianity and called it an evil and devilish religion there would an uproar in Christian circles, it would be said how Hindutva had poisoned our… https://t.co/F4pvZQDOri
— Kanwal Sibal (@KanwalSibal) October 20, 2024
பல்வேறு சமூகங்களில் நிலவும் மத வெறுப்பை எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. முக்கியமாக அமைதியான மதமான இந்து மதம் மீது திணிக்கப்படும் அடிப்படையற்ற வெறுப்பிற்கு எடுத்துக்காட்டாக இந்த கருத்துக்கள் அமைந்துள்ளன. இந்து மதம் மீது தொடுக்கப்படும் அவதூறுகளை உலக நாடுகள் பெரிதாக கண்டுகொள்வதும் இல்லை.
முக்கியமாக கிறித்தவத்தின் மீதான விமர்சனங்கள் அல்லது கேலிகள் வைக்கப்படும் போது அது கடினமாக எதிர்கொள்ளப்படுகின்றன. கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக பலர் களமிறங்குகிறார். இந்து மதத்திற்கு இதே நிலை ஏற்படும் போது.. அந்த குரல்கள் எழுப்பப்படுவது இல்லை. இன்றைய உலகில் உண்மையில் சகிப்புத்தன்மை உள்ளவர் யார்? என்ற கேள்வியை இந்த உரையாடல் ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications