ஈரானை தாக்கினால்.. டிரம்ப் ஆட்சியே கவிழுந்துவிடும்! அமெரிக்க சாம்ராஜ்ஜியமே காலி.. எச்சரித்த வல்லுநர்
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல அரசியல் விமர்சகர்களும், டிரம்பின் நெருங்கிய நண்பர்களுமான ஸ்டீவ் பேனன் மற்றும் டக்கர் கார்ல்சன் ஆகியோர் இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் விடுத்த கருத்துக்களை அவர்கள் விமர்சித்துள்ளனர். அதோடு டிரம்ப் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுமாறு ஈரான் நாட்டு மக்களை வலியுறுத்தினார். ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது.

ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன்.. ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் மீண்டும் தெரிவித்தார்.
டிரம்பின் இந்த கருத்தையும் டக்கர் கார்ல்சன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, கார்ல்சன் மற்றும் பேனன் அமெரிக்காவின் ஈடுபாட்டை விமர்சித்து வருகின்றனர். War Room என்ற போட்காஸ்டில் பேசிய கார்ல்சன், எனக்கு டிரம்ப் மீது உண்மையான அன்பு உள்ளது. அவர் மிகவும் இரக்கமுள்ள, கனிவான நபர். இதை நான் சொல்வதற்குக் காரணம், என் நாடு இதனால் மேலும் பலவீனமடையும் என்று நான் அஞ்சுகிறேன்.
ஈரானை அமெரிக்கா தாக்கினால்.. இஸ்ரேல் போரில் அமெரிக்கா தலையிட்டால் அது நம்முடைய வீழ்ச்சியாக மாறும். இதன் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் முடிவு விரைவில் வரும் என்று நினைக்கிறேன். மற்ற நாடுகள் அதை விரும்புகின்றன. ஈரானின் காரணமாக அமெரிக்கா பலவீனமடைய இது வழியாக அமைந்து விடும். இது டிரம்பின் அதிபர் பதவியையும் முடிவுக்குக் கொண்டுவரும்.. அமெரிக்காவின் முடிவு.. டிரம்பின் முடிவு இதன் மூலம் நடக்கும், என்றார்.
ட்ரம்பின் பதில்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜி7 மாநாட்டில் டிரம்ப் கருத்து தெரிவித்தார். "டக்கர் கார்ல்சன் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் கேட்கும்படி அவர் ஒரு தொலைக்காட்சி நெட்வொர்க்கை பெற்று சொல்லட்டும்.. பாட் காஸ்டில் பேசுவது எல்லாம் மக்களிடம் செல்லாது" என்று அவர் கிண்டலாக கூறினார்.
அதன் பின்னர் சில மணி நேரங்களிலேயே, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கார்ல்சனை சாடினார். "குழப்பமான மனநிலையில் இருக்கும் டக்கர் கார்ல்சனுக்கு இந்த போர் பற்றி யாராவது விளக்க முடியுமா? ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது.. . ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது.
ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன்.. ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள், என்று டிரம்ப் கோபமாக தெரிவித்தார்.
ஜி7 மாநாட்டை முடித்துவிட்டு டிரம்ப் வாஷிங்டன் திரும்புகிறார்
இதற்கு இடையே ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைவதைத் தடுக்கும் மசோதாவை 8 அமெரிக்க செனட்டர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் டிரம்ப் ஆதரவு செனட்டர்களே அவருக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் டிரம்ப் தனது ஜி7 பயணத்தை ஒருநாள் முன்னதாக முடித்துக்கொண்டு திங்களன்று வாஷிங்டன் திரும்புகிறார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், "அதிபர் டிரம்ப் இன்று இரவு வாஷிங்டன் திரும்புவார். ஏனெனில் அவர் பல முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications